• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஓய்வு காலத்தையும் சொர்க்கமாக மாற்றித் தரும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம்!!!

GenevaTimes by GenevaTimes
July 24, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஓய்வு காலத்தையும் சொர்க்கமாக மாற்றித் தரும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொதுவாக நமக்கு வயதாகி ரிட்டயர்மென்ட் கட்டத்தை அடையும்போது நம்முடைய வாழ்க்கை முறையை தொடர்ந்து ஒரே மாதிரியாக பராமரிக்க நாம் நமது சேமிப்புகளை நம்பி இருக்கிறோம். நல்ல ஒரு சௌகரியமான ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நமது கையில் போதுமான அளவு பணம் இருக்க வேண்டும். அந்த வகையில் சீனியர் சிட்டிசன்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சேமிப்புத் திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம். அரசு ஆதரவு பெற்று வரும் இந்த சேமிப்புத் திட்டம் பிற சேமிப்பு ஆப்ஷன்களை காட்டிலும் அதிக வட்டி விகிதத்தை அளிக்கிறது.

விளம்பரம்

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் என்றால் என்ன?

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (SCSS) என்பது இந்தியாவில் உள்ள சீனியர் சிட்டிசன்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு டெபாசிட் திட்டமாகும். இந்த திட்டம் அரசு ஆதரவு பெற்று வருவதால் இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. உறுதியளிக்கப்பட்ட வட்டி விகிதத்துடன் பாதுகாப்பான முதலீட்டை ஊர்ஜிதப்படுத்துவதால் SCSS சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

யாரெல்லாம் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் அக்கவுண்ட்டை திறக்க முடியும்?

அக்கவுண்ட்டை திறக்கும் தேதியில் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதை அடைந்த ஒரு நபர் அல்லது 55 வயது அடைந்து 60 வயதுக்கு உட்பட்டு அகவை முதிர் ஓய்வு முறையின் கீழ் ஓய்வு பெற்ற VRS அல்லது சிறப்பு VRS பெற்ற நபர்கள் SCSS அக்கவுண்ட்-ஐ திறக்கலாம்.

விளம்பரம்

ஒரு சில குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் ஓய்வு பெற்ற பாதுகாப்பு சேவை பணியாளர்கள் 50 வயதை அடையும்போது இந்த அக்கவுண்ட்டை திறக்கலாம்.

இந்த அக்கவுண்ட்டை ஒருவர் தனியாகவோ அல்லது வாழ்க்கைத் துணையுடன் ஜாயிண்ட் அக்கவுண்ட்டாகவோ திறக்க அனுமதிக்கப்படுகிறார். எனினும் ஜாயிண்ட் அக்கவுண்டில் இருக்கக்கூடிய மொத்த டெபாசிட் தொகையின் பொறுப்பு முதல் அக்கவுண்ட் ஹோல்டரை மட்டுமே சாரும்.

இதையும் படிக்க:
ஆண்டுக்கு 8.2% வரை வட்டி: முத்தான மூன்று போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா?

விளம்பரம்

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் அக்கவுண்ட் திறப்பது எப்படி (SCSS)?

SCSS அக்கவுண்ட்டை சீனியர் சிட்டிசன்கள் வங்கி அல்லது தபால் நிலையங்களில் திறக்கலாம். இதற்கு ஒருவர் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும், அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த அக்கவுண்டில் ஒருவர் ஒருமுறை மட்டுமே 1,000 ரூபாய் எண்ணிக்கையில் அதிகபட்சமாக 30 லட்சத்திற்கு மிகாமல் டெபாசிட் செய்யலாம். இந்த அக்கவுண்டில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட வித்டிராயல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

விளம்பரம்

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் வழங்கும் வரிச் சலுகைகள்

SCSS திட்டத்தில் நீங்கள் செய்யும் டெபாசிட்களுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரை டேக்ஸ் டிடக்ஷன் கிளைம் செய்யலாம்.

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தின் வட்டி விகிதம்

செப்டம்பர் 30, 2024 காலாண்டு வரை சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்திற்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு 8.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 3 மாதங்களுக்கு ஒரு முறை அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
EV News: மின்சார வாகனம் வாங்கப் போறீங்களா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான்!

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தின் கால அளவு

அக்கவுண்டை திறந்த தேதியிலிருந்து 5 வருடங்கள் முடிவடையும் நிலையில் இந்த அக்கவுண்ட்டை ஒருவர் மூடலாம். அக்கவுண்டை நீட்டிக்க நினைக்கும் நபர்கள் கூடுதலாக 3 வருடங்களுக்கு நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒரு சில நிபந்தனைகளின் கீழ் அக்கவுண்ட்டை முன்கூட்டியே ஒருவர் மூடலாம். இந்த திட்டத்தில் ஒருவர் அதிகபட்ச தொகையான 30 லட்சம் ரூபாயை முதலீடு செய்யும்போது, ஒரு வருடத்திற்கு 2.46 லட்சம் ரூபாய் வட்டி என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் 20,000 ரூபாய் கிடைக்கும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!!

Next Post

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்; 82-வது இடத்தில் இந்தியா! | Singapore tops world’s most powerful passport rankings; India at 82nd place

Next Post
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்; 82-வது இடத்தில் இந்தியா! | Singapore tops world’s most powerful passport rankings; India at 82nd place

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்; 82-வது இடத்தில் இந்தியா! | Singapore tops world's most powerful passport rankings; India at 82nd place

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin