2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை ஊக்கும்விக்கும் வகையிலான 3 முக்கிய திட்டங்களை வெளியிட்டார். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அமைப்பின் கீழ், முதல்முறையாக வேலைக்கு வரும் பணியாளர்களை அங்கீகரிக்கும் திட்டம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். அத்துடன், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
முதல் முறை பணியாளர்கள்
உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதல் முறையாக பணிக்குச் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். EPFO வில் பதிவு செய்த முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும். இந்த தொகை மூன்று தவணைகளில் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் 20 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள்.
உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்
உற்பத்தி துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டமாகும். வேலையின் முதல் 4 ஆண்டுகளில் EPFO பங்களிப்பை பொறுத்து, பணியாளர் மற்றும் நிறுவனத்திற்கு நேரடியாக குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின்மூலம் 30 லட்சம் இளைஞர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் பயனடைவர்.
இதையும் படிங்க:
சொத்து விற்பவர்களுக்கு பட்ஜெட்டில் புதிய வரி – யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?
நிறுவனங்களுக்கு ஆதரவு
மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களில் கூடுதலாக இருக்கும் வேலைவாய்ப்புகள் கணக்கிடப்படும். ஒவ்வொரு கூடுதல் பணியாளர்களுக்கும், EPFO பங்களிப்பிற்காக, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.3,000 வீதம் நிறுவனத்திற்கு அரசு வழங்கும். இதன் மூலம் 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
