மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கியமான திட்டத்தை அறிவித்தார். அதாவது சாமானிய மக்களின் முக்கிய முதலீட்டுத் திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் என்.பி.எஸ். வாத்சல்யா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதைய குழந்தைகள் எதிர்காலத்தில் நிதி சுதந்திரத்துடன் இருப்பதை உறுதி செய்ய நினைக்கும் பெற்றோருக்கு உதவும் வகையில், இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குழந்தைகள் 18 வயதை அடையும் வரை பெற்றோர் பணம் செலுத்தலாம். இந்த காலக்கட்டத்தில் செலுத்தப்படும் பணம் சாதாரண என்பிஎஸ் திட்டத்தைப் போலவே சேமிக்கப்பட்டு வரும்.
குழந்தைகள் 18 வயதை அடைந்த பிறகு வாத்சல்யா கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் என்பிஎஸ் கணக்கிற்கு மாற்றப்படும். மேலும், குழந்தைகள் 18 வயதை அடைந்த பிறகு இந்த திட்டத்தை என்பிஎஸ் அல்லாத வேறு திட்டங்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இது அரசின் நீண்ட கால நிதி பாதுகாப்பு திட்டங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. ஒன்று பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம், மற்றொன்று பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம். இரண்டாம் வகையான திட்டத்தில் என்பிஎஸ் கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம், பங்குகள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்.
இதையும் படிங்க:
மின்சார வாகனம் வாங்கப் போறீங்களா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான்!
பங்குச் சந்தையின் செயல்திறனைப் பொறுத்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் லாபம் மாறுபடுகிறது. இதனால், ஓய்வூதியத்தின்போது கிடைக்கும் தொகை முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை. இதனால், என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 9-12 சதவீதம் வரை சராசரி லாபம் கிடைக்கும். அதேபோல், என்பிஎஸ் வாத்சல்யா திட்டத் தொகையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். எனவே, சுகன்யா சம்ரித்தி திட்டத்தைக் காட்டிலும் அதிக லாபம் தரக்கூடியது என்று கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
