17 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவிடம் இருந்து மகளை கணவன் பிரித்து சென்றார். இதன்பின்னர் சட்டப் போராட்டம் மூலம் தனது மகளை தாயார் பெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டுள்ளன.
அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் விக்டோரியா. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் முடித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும்போது அவரது தந்தை தனது சொந்த நாட்டை சுற்றிக் காண்பதற்கும், உறவினர்களை பார்ப்பதற்கும் செல்வதாக கூறி மகளை தாயிடம் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
மகள் திரும்பி வந்து விடுவார் என்ற நம்பிக்கையோடு அவரை விக்டோரியா வழியனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், அவரை ஏமாற்றிய சவூதி இளைஞர், மகளை தனது சொந்த நாட்டிற்கு கொண்டு சென்று, அங்கேயே வைத்துக் கொண்டார். பின்னர் அவர் அயர்லாந்துக்கு திரும்பவே இல்லை.
இதையும் படிங்க – பூமிக்கு மிக அருகில் வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம் – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
இதற்கிடையே, தனது மகளை பார்ப்பதற்காக விக்டோரியா பலமுறை சவுதி அரேபியாவுக்கு வந்தபோது, மகளை பார்ப்பதற்கு அனுமதி ஏதும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தூதரகம் மூலமாக விக்டோரியா முயற்சிகளை மேற்கொண்டார்.
இதற்கு சவூதி அரேபிய அரசு சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக சலசலப்பு இருந்து வந்தது.
இருப்பினும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட விக்டோரியா தற்போது சட்டப் போராட்டத்தை கையில் எடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார். சவூதி நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களை கட்டுப்படுத்தும் உரிமையில்லை என்று கூறி, மகளை பார்ப்பதற்கு விக்டோரியாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் தாயும் மகளும் அயர்லாந்தில் சந்தித்து கொண்டனர். நெகிழ்ச்சியை ஏற்படுத்து படத்தில் நடப்பதை போன்ற இந்த சம்பவம் இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)