பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் உலகம் முழுவதும் ஒரு குறிப்பிடத்தக்க விவசாயப் பொருளாக கருதப்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான மாம்பழங்களை உற்பத்தி செய்யும் 10 முக்கியமான நாடுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
-
1.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்து வியட்நாம் 10வது இடத்தைப் பிடிக்கிறது.
-
1.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக பங்களாதேஷ் 9வது இடத்தில் உள்ளது.
-
8வது இடத்தில் இருக்கும் தாய்லாந்து 1.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது.
-
அடுத்தபடியாக 7வது இடத்தில் வசிக்கும் மலாவி 1.7 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை விவசாயம் செய்கிறது.
-
2.1 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்வதால் பிரேசில் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடிக்கிறது.
-
2.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக மெக்சிகோ 5வது இடத்தில் உள்ளது.
-
4வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2.7 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது.
-
இந்தோனேசியா 3.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக 3வது இடத்தை பெறுகிறது.
-
2வது இடத்தில் உள்ள சீனா 3.8 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது.
-
இந்த பட்டியலில் 25 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்வதன் மூலமாக இந்தியா மாம்பழங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக முதல் இடத்தை பிடிக்கிறது.
மாம்பழ உற்பத்தி பட்டியலில் உலக அளவில் இந்தியாவின் இடத்தை தெரிந்து கொண்டோம். அடுத்தபடியாக மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மாம்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்க கூடிய சில நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் மாம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் மாம்பழங்களில் புரோட்டின், ஆரோக்கியமான கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்போது மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க:
Nipah Virus : நிஃபா வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
-
ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் அதிகம் காணப்படும் மாம்பழங்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கு உதவுவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாம்பழத் தோலானது உடற்பருமன் பிரச்சனையை தவிர்க்க உதவும் என்று 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. மாம்பழத் தோலில் காணப்படும் ஒருவிதமான கெமிக்கலே இதற்கு காரணமாக அமைகிறது.
-
நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த நபர்களுக்கு தொடர்ச்சியாக 4 வார காலம் மாம்பழங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களுடைய அறிகுறிகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. அதுமட்டுமின்றி, மா இலைகளும் வயிற்றுப்போக்குக்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன.
-
மாம்பழங்களில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் வீக்க எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் விளைவுகளை அளித்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன. வைட்டமின் A மற்றும் வைட்டமின் C நிறைந்த மாம்பழங்கள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்திலுள்ள வயதான அறிகுறிகளைப் போக்குகிறது.
-
மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும் வைட்டமின் C குறைபாடு மாம்பழங்கள் சாப்பிடுவதால் தீர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நமது தலைமுடியின் வளர்ச்சிக்கும் வைட்டமின் C அவசியமானதாக இருப்பதால் மாம்பழம் சாப்பிடுவதன் மூலமாக நீளமான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெறலாம். சருமம் மற்றும் தலைமுடிக்கு அவசியமான வைட்டமின் A ஊட்டச்சத்தும் மாம்பழங்களில் அதிக அளவில் உள்ளன.
-
வீக்க எதிர்ப்பு பண்புகள் கொண்ட மாம்பழங்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. மாம்பழங்களில் காணப்படும் கரட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்கிறது.
-
லூட்டின் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு கரட்டினாய்டுகள் கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. வயது காரணமாக ஏற்படும் கண் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இந்த இரண்டு கரட்டினாய்டுகள் தீர்வு தருகின்றன.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)