வரலாற்று காலத்தில் இருந்தே தங்கத்திற்கு உலகம் முழுவதும் நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே, தங்க சுரங்கம் தோண்டுவது ஆதிகாலத்தில் இருந்து இருக்கும் நடைமுறையாகும். இந்த வகையில், கொலராடோவை தளமாக கொண்ட நியூமாண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டில் 250 டன் தங்கத்தை வெட்டி எடுத்து, உலகின் மிகப்பெரிய தங்க சுரங்க நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1916ஆம் ஆண்டில் நியூயார்க்கில் கர்னல் வில்லியம் பாய்ஸ் தாம்சன் என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நியூமாண்ட் நிறுவனம் ஆரம்பத்தில் பல்வேறு கனிமங்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டது. குறிப்பாக, எண்ணெய் வயல்களை கண்டறிவதில் முக்கிய பங்காற்றியது. அதன்மூலம் தாம்சன் தனது நிறுவனத்தையும், தன்னையும் வளமாக்கிக் கொண்டார். நியூமாண்ட் தொடங்கிய சில மாதங்களிலேயே அதாவது, 1917ல் தென்னாப்பிரிக்காவின் ஆங்கிலோ அமெரிக்கன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அதன்பிறகு 1921ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தை தனது நியூமாண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டது.
தற்போது, அமெரிக்காவில் நெவடா, கொலராடோ, ஒன்டாரியோ, கியூபெக், மெக்சிகோ, டொமினிகன் குடியரசு, ஆஸ்திரேலியா, கானா, அர்ஜென்டினா, பெரு, சுரினாம் என உலகின் பல்வேறு பகுதிகளில் தனது தங்கச் சுரங்கத்தை வைத்து இயங்கி வருகிறது. தங்கம் தவிர தாமிரம், வெள்ளி, துத்தநாகம் மற்றும் ஈயம் உள்ளிட்ட பிற மதிப்புமிக்க வளங்களையும் நியூமாண்ட் நிறுவனம் வெட்டியெடுக்கிறது.
இதையும் படிங்க:
பூமிக்கு மிக அருகில் வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம் – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
தற்போது தலைமை நிர்வாக அதிகாரி டாம் பால்மர் தலைமையின் கீழ் நியூமாண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய தங்கச் சுரங்கத் தொழிலை தொடர்ந்து வழி நடத்துகிறது. உலகம் முழுவதும் சுமார் 31,600 ஒப்பந்ததார்களை பணியமர்த்தியுள்ள இந்த நிறுவனம், தங்க உற்பத்தியில் தனித்து விளங்குகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)