தற்போது உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்போன் மோகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இதனால்மைதானத்திற்கு சென்று விளையாடுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மேலும் கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி கூடைப்பந்து கழகமானது தொடர்ந்து கிராமப்புற பகுதிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ராமநாதன் கூடைப்பந்து மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த கூடைப்பந்து போட்டியில் புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 28 ஆண்கள் அணியும், நான்கு பெண்கள் அணியும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். மேலும் பகல், இரவாகவும் லீக் முறையில் நடைபெற்ற இப் போட்டியில் ஆண்கள் பிரிவில் புல்ஸ் அணி முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் மேஜிக் பிஸ்கட் பால் அணி முதலிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது . இவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத்தின் நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதுகுறித்து கைப்பந்து சங்க நிர்வாகிகள் கூறும்போது நகரப்புறங்களை விட கிராமப்புறங்களில் விளையாட்டின் மீது மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் விளையாட்டின் மூலம் அரசாங்கத்தில் உள்ள பணிகளையும் பெறுகின்றனர். அதனால் தான் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கிராமப்புறத்தில் நடத்தினோம். இதேபோல் பல்வேறு போட்டிகளை கிராமப்புறங்களில் நடத்தினால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
