ஒரு பக்கம் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், மறுபக்கம் பல இந்திய குடும்பங்களின் வருமானம் மற்றும் சேமிப்புகள் கணிசமாக குறைந்து வருகின்றன. இந்த சூழலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் 2024-25 சிறிது நிவாரணம் அளிக்கும் என்று பலர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
உணவு, பள்ளிக் கல்வி, வாடகை, போக்குவரத்து, மின்சாரச் செலவு போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அடிப்படை செலவுகளை கணிசமாக உயர்த்தி இருக்கிறது. இதில் பலருக்கும் வருமானம் குறைந்து வருவது மற்றும் சேமிப்பு கரைவது, மூதாதையர் சொத்து அல்லது கடன் வாங்குவது போன்ற சுமைகள் ஏற்பட்டிருப்பது பெரும் கவலையாக உள்ளது.
விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வருமானம் மற்றும் சேமிப்பில் குடும்பங்கள் எந்த மாதிரியான சூழலை எதிர்கொண்டு வருகின்றன என்பதை கண்டறிய லோக்கல் சர்க்கிள்ஸ் சார்பில் தேசிய கணக்கெடுப்பு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. 2022-23 வரையிலான மூன்று ஆண்டுகளில் (FY23) இந்தியாவில் நிகர குடும்ப சேமிப்பு ரூ.9 டிரில்லியன் குறைந்து ரூ.14.16 டிரில்லியனாக உள்ளது. Ministry of Statistics and Programme Implementation வெளியிட்ட தேசியக் கணக்கு புள்ளி விவரங்கள் 2024ல் கூறப்பட்டிருக்கும் தரவுகளின்படி, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் குடும்ப சேமிப்பு விகிதம் FY21-ல் GDP-யில் 22.7%-லிருந்து, கடந்த FY23-ல் 18.4%-ஆக குறைந்துள்ளது.
கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலை இருந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் குடும்ப சேமிப்பு ரூ.23.29 லட்சம் கோடி என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால் இதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 2021-22 நிதியாண்டில் இது ரூ.17.12 லட்சம் கோடியாகவும், மேலும் 2022-23 நிதியாண்டில் இது ரூ.14.16 லட்சம் கோடியாகவும் சரிந்தது. 2022-23 நிதியாண்டில் financial liabilities-களில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு 76% அதிகரித்து, நிகர நிதிச் சொத்துக்களில் கணிசமான சரிவு ஏற்பட வழிவகுத்தது.
இதையும் படிக்க:
PM கிசான் AI சாட்போட் என்றால் என்ன..? இந்த திட்டத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? – விவரம்
இந்த சர்வேயில் நாட்டின் சுமார் 327 மாவட்டங்களில் உள்ள மக்கள் பங்கேற்றனர், இதில் சுமார் 21,000 பேரிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன. பதிலளித்தவர்களில் 67% பேர் ஆண்கள் மற்றும் 33% பேர் பெண்கள். மேலும் பதிலளித்தவர்களில் 44% பேர் டைர் 1, 32% பேர் டைர் 2 மற்றும் 24% பேர் டைர் 3, 4 மற்றும் கிராமப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பல குடும்பங்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு அல்லது வாழ்வாதாரம் முக்கிய கவலையாக இருப்பதால், இந்த கணக்கெடுப்பில் முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய 12 மாதங்களில் (ஏப்ரல் 2024-மார்ச் 2025) உங்கள் குடும்ப வருமானம் எப்படி இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று முதலில் அவர்களிடம் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு சுமார் 10,977 பேர் பதிலளித்தனர். இதில் 7% பேர் தங்கள் குடும்ப வருமானம் “25% அல்லது அதற்கும் அதிகமாக குறையும்” என்று கணித்துள்ளனர். அதே நேரம் 30% பேர் தங்களின் குடும்ப வருமானம் “10- 25% குறையும்” என்றும் 11% பேர் “குறையும் ஆனால் எவ்வளவு என்று சொல்ல முடியாது” என்றும் கூறியுள்ளனர். எனினும் இந்த கேள்விக்கு பதிலளித்தவர்களில் சுமார் 26% பேர் “குடும்ப வருமானத்திற்கு பாதிப்பு இருக்காது” என்று எதிர்பார்ப்பதாகவும், சுமார் 15% பேர் தங்களின் குடும்ப வருமானம் 0-25% அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளனர். தவிர 11% பேர் “குடும்ப வருமானம் அதிகரிக்கும் ஆனால் எவ்வளவு என்று சொல்ல முடியாது” என குறிப்பிட்டுள்ளனர். மொத்தத்தில் 2023-24 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024-25 நிதியாண்டில் தங்களின் குடும்ப வருமானம் குறையும் என சுமார் 48% பேர் நம்புகிறார்கள்.
இதையும் படிக்க:
இந்தியாவின் டாப் 3 வங்கிகள் வெளியிட்டுள்ள சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க!
ஏப்ரல் 2024-மார்ச் 2025-ல் குடும்ப சேமிப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு 10,820 பேரிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன. பதில் கூறியவர்களில் 10% பேர் “25% அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கும்” என்றனர். “0-25% அதிகரிக்கும் என 10% பேரும், “அதிகரிக்க வாய்ப்பு உள்ளது; ஆனால் எவ்வளவு என்று தெரியாது” என 10% பேரும் குறிப்பிட்டுள்ளனர்; மேலும் 18% பேர் “தற்போதிருக்கும் நிலையிலேயே இருக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளனர்.
28% பேர் தங்களின் சேமிப்பு “0-25% வரை குறைய வாய்ப்புள்ளது” என்றும்; 15% பேர் தங்களின் குடும்ப சேமிப்பு “25%-க்கும் மேல் குறைய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 5% பேர் குடும்ப சேமிப்பு” குறைய வாய்ப்பு உள்ளது; ஆனால் எவ்வளவு என்று சொல்ல முடியாது” என்றும், சுமார் 4% பேர் தெளிவான பதில் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். மொத்தத்தில் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024-25 நிதியாண்டில் சராசரி குடும்பச் சேமிப்பு குறையும் என 48% பேர் நம்புகின்றனர்.
நிதியமைச்சர் விரைவில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில் வருமான வரி விகிதங்களில் குறைப்பு, பூஜ்ஜிய வரி கொண்ட வருமான வரம்பு விரிவாக்கம் அல்லது 80C-ன் கீழான விலக்கு வரம்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவிக்கக்கூடும், இதன் மூலம் தங்களுக்கு இருக்கும் பொருளாதார அழுத்தத்திலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
