பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒலிம்பிக் தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை பார்க்கலாம்.
-
உலகின் தலைசிறந்த விளையாட்டுப்போடியான ஒலிம்பிக்கில் பரிசுத்தொகைக்கு இடமில்லை பதக்கத்திற்கும் மகுடத்திற்கும் மட்டுமே கௌரவம்.
-
உலகின் மதிப்புமிக்க பதக்கங்களில் ஒன்றான ஒலிம்பிக் தங்கப்பதக்கம் முழுவதும் தங்கமா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
-
சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் விதிப்படி தங்கப்பதக்கத்திற்கு 24 கேரட் தங்கம் 6 கிராமும், வெள்ளிப்பதக்கத்திற்கு 210 கிராம் வெள்ளியும், வெண்கல பதக்கத்திற்கு காப்பர், துத்தநாகம், டின் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
-
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 32 வகையான விளையாட்டில் 309 பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தத்தில் 5084 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த பதக்கத்தை பாரிஸில் உள்ள மிகவும் பிரபலமான ஜூவல்லரியான சாமெட் (Chaumet) நிறுவனம் தயாரித்துள்ளது.
-
உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவரிலிருந்து எடுக்கப்பட்ட இரும்பு மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஈஃபிள் டவரை புணரமைக்கும் போது சேகரிக்கப்பட்ட இரும்பை மீண்டும் வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் பதக்கம் மூலம் அழகு சேர்த்துள்ளனர்.
-
85 மி.மீ. விட்டம், 9.2 மி.மீ. தடிமன் கொண்ட தங்கப்பதக்கம் 529 கிராம் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு கிராம் சுத்தமான தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகள் ஹெக்சகன் வடிவில் ஈஃபிள் டவர் இரும்பும், வெள்ளியும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
-
பதக்கத்தின் ஒரு பக்கத்தில் 33வது பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் ஒலிம்பிக் வளையம் பொறிக்கப்பட்டுள்ளது.
-
மறுபக்கத்தில் ஒலிம்பிக் தேவதையும், 1896 ஏதன்ஸ் ஒலிம்பிக் மைதானமும் அச்சிடப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து பாரிஸ் ஒலிம்பிக்கை நினைவு படுத்தும் விதமாக புகழ்பெற்ற ஈஃபிள் டவரும் பொறிக்கப்பட்டுள்ளது
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
