• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி முதல் பஞ்சாப் நேஷனல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி வரை… ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தரப்படும் வட்டி விகிதம் எவ்வளவு?

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி முதல் பஞ்சாப் நேஷனல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி வரை… ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தரப்படும் வட்டி விகிதம் எவ்வளவு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குறைவான ஆபத்து, உத்தரவாதமான ரிட்டர்ன் தொகை, பாதுகாப்பான திட்டம் போன்ற காரணங்களால் பிரபலமான முதலீடாக நிலையான வைப்புத்தொகை (ஃபிக்ஸட் டெபாசிட்) திட்டங்கள் திகழ்கின்றன. முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் தொகையை இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது திட்டம் முதிர்ச்சி அடைந்த பிறகோ நிலையான வட்டித் தொகைகளைப் பெறலாம்.

பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து 3% முதல் 7.50% வரை இருக்கும். மூத்த குடிமக்களாக இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி விகிதம் கிடைக்கும்.

விளம்பரம்

எனினும் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் சேர்வதற்கு முன் வெவ்வேறு வங்கிகள் வழங்கும் நிலையான வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். இந்தக் கட்டுரையில், ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு நான்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றிய தகவலை நாங்கள் தருகிறோம்.

பாரத ஸ்டேட் வங்கி (ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்)

எஸ்பிஐ எஃப்டி வட்டி விகிதங்கள்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை வட்டி தரப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் கூடுதலாக 0.50 சதவிகித வட்டி கிடைக்கும். ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு, எஸ்பிஐ வங்கி 6.80 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே சமயம் இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு முதலீடு செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு, 7 சதவிகிதம் வட்டி தரப்படுகிறது.

விளம்பரம்

பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்)

பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3.50 சதவிகிதம் முதல் 7.50 சதவிகிதம் வரை வட்டி தரப்படுகிறது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.75 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் ஒரு வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு, 7.25 சதவிகிதம் வட்டி தரப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரூ.1 லட்சம் வரை அபராதம்… ஆதார் தொடர்பாக இருக்கும் கிரிமினல் குற்றங்கள் என்ன தெரியுமா?

ஐசிஐசிஐ வங்கி (ரூ. 5 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்)

ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்: ஜூன் 27, 2024 நிலவரப்படி, ஐசிஐசிஐ வங்கி அதன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 3 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வழங்குகிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் கூடுதல் 0.5 சதவீத வட்டியை அனுபவிக்கிறார்கள். இதன் விளைவாக 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் முதிர்ச்சி அடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்கள் உள்ளன. குறிப்பாக, ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு, மூத்த குடிமக்கள் அல்லாத பொது வாடிக்கையாளர்களுக்கு 6.70 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
மறந்துபோன அல்லது தொலைந்து போன ஆதார் எண்ணை இலவசமாக மீட்டெடுப்பது எப்படி? – எளிய வழிமுறை

ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கான விகிதங்கள்)

ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்: ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. வழக்கமான முதலீட்டாளர்களுக்கு 6.60 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்களாக இருந்தால் 7.10 சதவிகிதம் வட்டி பெறுகிறார்கள். மேலும் முதிர்வு காலத்தைப் பொறுத்து பொது வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை ஹெச்டிஎஃப்சி வங்கி வழங்குகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Hardik Pandya and Natasa Stankovic: 4 வருட உறவு முடிவு!அடிமேல் அடி – நடாஷாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாண்டியா-hardik pandya natasa stankovic announce separation decided to mutually part ways

Next Post

இலங்கை முல்லைத்தீவில் மனித புதைகுழி… இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு!

Next Post
இலங்கை முல்லைத்தீவில் மனித புதைகுழி… இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு!

இலங்கை முல்லைத்தீவில் மனித புதைகுழி... இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin