• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக்கோப்பையை அமெரிக்காவில் நடத்தியதால் ஐசிசிக்கு ரூ.167 கோடி இழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 உலகக்கோப்பையை அமெரிக்காவில் நடத்தியதால் ஐசிசிக்கு ரூ.167 கோடி இழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் நடத்தியால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ. 167 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலகக்கோப்பை தொடர் ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இந்த தொடரின் பெரும்பாலான லீக் ஆட்டங்கள் அமெரிக்க மைதானங்களில் நடத்தப்பட்டன. பாரம்பரியமாக கிரிக்கெட் நடத்திய அனுபவம் அமெரிக்காவுக்கு கிடையாது.

விளம்பரம்

இதனால் போட்டிக்கான ஆடுகளங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. அந்த வகையில் பெரும் தொகையை ஐசிசியும், அமெரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் செலவிட்டதாக கூறப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள கிரிக்கெட் மைதானம், டி20 உலகக்கோப்பைக்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்டது.

கிரிக்கெட் தொடர் முடிந்ததும், நியூயார்க் கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதேபோன்று அமெரிக்காவில் செலவுகள் அதிகம் என்பதால் ஐசிசி எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் ஆட்டத்தை காண வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தியால் ஐசிசிக்கு ரூ. 167 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க – மன்னிப்பு கேட்டும் முடியாத பிரச்சனை… ஹர்பஜன், யுவராஜ், சுரேஷ் ரெய்னா மீது போலீசார் வழக்குப்பதிவு!

மேலும் இந்த கூட்டத்தின்போது ஐசிசியின் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவுக்கு பதிலாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா புதிய தலைவராக நியமிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

இதேபோன்று ஐசிசி தலைவரின் பதவிக்காலத்தை மாற்றியமைப்பது குறித்தும் ஐசிசி ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு; 75 பேர் மீட்பு | Fire at shopping mall in Chinas Sichuan Province kills 16 people

Next Post

உலகின் 5 பெரிய நிலக்கரி சுரங்கங்களில் 2 தற்போது இந்தியாவில் உள்ளன: மத்திய அரசு | Two of the World’s Five Largest Coal Mines Now in India

Next Post
உலகின் 5 பெரிய நிலக்கரி சுரங்கங்களில் 2 தற்போது இந்தியாவில் உள்ளன: மத்திய அரசு | Two of the World’s Five Largest Coal Mines Now in India

உலகின் 5 பெரிய நிலக்கரி சுரங்கங்களில் 2 தற்போது இந்தியாவில் உள்ளன: மத்திய அரசு | Two of the World’s Five Largest Coal Mines Now in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin