Last Updated : 18 Jul, 2024 09:19 AM
Published : 18 Jul 2024 09:19 AM
Last Updated : 18 Jul 2024 09:19 AM

நாட்டிங்காம்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளும் நாட்டிங்காமில் இன்று 2-வது டெஸ்டில் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அணி நேற்று அறிவித்தது. இதில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாக மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
FOLLOW US
தவறவிடாதீர்!


&w=1200&resize=1200,675&ssl=1)