சுங்கக்கட்டணம், உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலை உயர்வால் வீழ்ச்சி அடைந்து வரும் லாரி தொழிலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வரும் மத்திய பட்ஜெட்டில் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரித் தொழில் சார்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான சரக்குகள், பெட்ரோலியப் பொருட்கள் என அனைத்தையும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் லாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த லாரிகளை தயாரிப்பதற்கான தொழில், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் கொடிகட்டி பறக்கத் தொடங்கியது. பரமத்திவேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகளை உள்ளன.
இதையும் படிக்க:
சசிகலா 4 நாட்கள் சுற்றுப்பயணம்.. பின்னணி என்ன?
லாரி கூண்டு கட்டும் தொழில், பழுது நீக்கும் தொழிலகம், வர்ணம் பூசுதல், பட்டறைகள் என அதனை சார்ந்த தொழில்கள் நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் துறையாக லாரித் தொழில் மாறிப்போய் உள்ளது.
ஆலமரமாக வளர்ந்து நிற்கும் இந்த தொழில், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. அதற்கு காரணம், சுங்கக்கட்டணம், டயர் மற்றும் லாரியின் உதிரிபாகங்கள், டீசல் விலை, காப்பீடு ஆகியவற்றின் விலையேற்றம் மற்றும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
இதே போன்று, லாரி பாடி கட்டும் தொழிலுக்கு 18 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக ஜிஎஸ்டி-யை குறைத்தால், இதனை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான சிறுகுறு ஆலைகள் வளர்ச்சி அடையும் என பாடி கட்டும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிவர்ஸ் கியரில் செல்லும் லாரி தொழிலை முன்னோக்கி செல்ல, இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
