அமெரிக்கத் தெருக்களில் வாசனை திரவியங்கள் விற்பனை செய்த ஒருவர், துபாயில் கோடீஸ்வரராவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அதை சாதித்துக் காட்டியுள்ளார் கபீர் ஜோஷி. இன்று இவர் Vantage Capital மற்றும் Vantage Properties ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) இருக்கிறார். அதோடு மட்டுமின்றி 1.5 பில்லியன் மதிப்புள்ள சொத்து பரிவர்த்தனைகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார். இவரது அசாதாரணமான பயணத்தை நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இராணுவப் பின்னணி கொண்ட நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த காரணத்தினால், ஜோஷிக்கு அடிக்கடி ஊர் மாற வேண்டிய சூழல் இருந்தது. 13 – 14 மாதங்களுக்கு ஒருமுறை புதிய சூழலுக்கு தன்னை தகவமைத்துக்கொண்டு, புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டார். வருங்காலத்தில் சந்திக்கப் போகும் சவால்களுக்கு இத்தகைய சூழலே அவரை தயார்படுத்தியது.
இளம் வயதிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த ஜோஷி, அங்குள்ள மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில் பயின்றார். இதற்கிடையில், இந்தியா வந்திருந்தபோது, எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தொன்றில் அவரது வலது கை முற்றிலும் செயலிழந்தது. பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் கூட, அவர் தனது பட்டப்படிப்பை தொலைதூரத்தில் உள்ள பஞ்சாபிலிருந்து முடித்தார்.
மறுபடியும் அமெரிக்காவுக்குத் திரும்பிய அவருக்கு, மூன்று ஆண்டு பட்டப்படிப்பின் காரணமாக குறைந்த வேலைவாய்ப்புகளே இருந்தன. இதனால் சிகாகோ தெருக்களில் வாசனை திரவியங்களை விற்கத் தொடங்கினார். அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்வதால், கைதுக்கு பயந்து வாஷிங்டனுக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு கால் சென்டரில் வேலை பார்த்தார். பின்னர் ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அத்தாரிட்டியில் சேர்ந்தார்.
ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கான வெள்ளக் காப்பீட்டை அண்டர்ரைட்டிங் செய்தபோதும், தரகு நிறுவனத்தில் ஆரம்ப ஒப்பந்தங்களை முடித்ததன் மூலமும் ரியல் எஸ்டேட் குறித்து முதன்முதலில் அறிந்து கொண்டார் ஜோஷி. 2003ம் ஆண்டில், நியூயார்க்கில் நடந்த துபாய் ரியல் எஸ்டேட் கண்காட்சி அவரது ஆர்வத்தை தூண்டியது. வளர்ந்து வரும் சந்தையால் ஈர்க்கப்பட்ட அவர், துபாயில் உள்ள வாய்ப்புகளை ஆராய முடிவு செய்தார்.
2004ல் தனது திருமணத்திற்காக இந்தியாவுக்கு வந்த ஜோஷி, அதன்பிறகு துபாயில் உள்ள துபாய் ஹோல்டிங்கின் விற்பனைக் குழுவில் பணியாற்ற தொடங்கினார். துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் அவரது கேரியரைத் தொடங்குவதற்கு இதுதான் ஆரம்பமாக இருந்தது. அன்றிலிருந்து துபாயை தனது சொந்த வீடாக கருதத் தொடங்கினார்.
இதையும் படிக்க:
Investment Tips : மாதம் ரூ. 3000.. ரூ. 1 கோடி வரை பெறலாம்… எப்படி தெரியமா?
2019-ல், நூர் வங்கியை துபாய் இஸ்லாமிய வங்கி கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, Vantage Capital Advisory என்ற நிறுவனத்தை தொடங்கினார் ஜோஷி. குடும்ப அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் இவரது நிறுவனம் கவனம் செலுத்தி, அவர்களுக்கு ரியல் எஸ்டேட் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இந்நிலையில் 12 பேர் கொண்ட குழுவுடன் Vantage Properties என்ற நிறுவனத்தை 2023ம் ஆண்டு தொடங்கினார் ஜோஷி.
ஜோஷியின் இந்த பயணத்தில் பல திருப்புமுனைகளை கண்டுள்ளார். தனிப்பட்ட முறையில், அவருக்கு நிகழ்ந்த விபத்தின்போது மரணத்தை அருகில் சென்று பார்த்த காரணத்தால் வாழ்க்கையிலும், தொழிலும் அச்சமற்ற அணுகுமுறையை அவருக்குள் விதைத்தது.
இதையும் படிக்க:
மறந்துபோன அல்லது தொலைந்து போன ஆதார் எண்ணை இலவசமாக மீட்டெடுப்பது எப்படி? – எளிய வழிமுறை
துபாய்க்குச் சென்றதையும், துபாய் ஹோல்டிங்கில் தான் வகித்த பதவியையும் தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாகக் கருதுகிறார். “வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்புகளை துபாய் எனக்கு அளித்துள்ளது” என்கிறார் ஜோஷி. ரைடர், கோல்ப் வீரர் மற்றும் புத்தக வாசகராக இருக்கும் ஜோஷி, இளம் தொழில்முனைவோர்கள் தங்கள் கேரியரில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
