• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆச்சரியப்பட வைத்த 140 கிலோ தென்னாப்ரிக்கா ஆடு… லாபகரமான பண்ணைக்கு இது சரியான தேர்வு…

GenevaTimes by GenevaTimes
July 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆச்சரியப்பட வைத்த 140 கிலோ தென்னாப்ரிக்கா ஆடு… லாபகரமான பண்ணைக்கு இது சரியான தேர்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை கொடிசியா அரங்கில் அக்ரி இன்டெக்ஸ் என்னும் 22வது பிரம்மாண்ட வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த வேளாண் கண்காட்சியை நடத்துகின்றன.

இந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் விவசாயத்திற்குத் தேவையான பல வகை உபகரணங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கால்நடை வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்கள், விவசாயத்தை எளிமையாக்கும் நவீன உபகரணங்கள் என பல உபகரணங்களும், அவற்றுக்கு அரசு வழங்கும் மானியம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

விளம்பரம்

இந்த கண்காட்சியைப் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த விவசாயிகள் மிகுந்த ஆர்வமாகப் பார்த்து விவரங்களைக் கேட்டறிந்தனர். இந்த கண்காட்சியில் ஒரு ஸ்டாலில் இருந்த ஆடு அங்கு வந்த மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதையும் படிங்க: TNPSC Video: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஈசியா விண்ணப்பிக்கலாம்… ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம் இதோ..!

அது சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு வகையான ஆடு இனமாகும். இதன் பெயர் போயர் இந்த ஆடு ஒரு ஆண்டிற்கு 70 கிலோ எடை வரை வளரக்கூடியவை. விழுப்புரத்தைச் சேர்ந்த விஜய் ஃபார்ம் அமைத்திருந்த ஸ்டாலில் தான் இந்த ஆச்சரியப்பட வைக்கும் ஆடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

விளம்பரம்

இதுகுறித்து விஜய் ஃபார்மைச் சேர்ந்த வெங்கடேஷ் கூறுகையில், “16 வருடமா இந்த நாங்கள் இந்த பண்ணை அமைப்பதில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆடு செட் அமைப்பதற்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் தயார் செய்கிறோம். நாங்கள் இந்த செட்டை FRB என்னும் துரு பிடிக்காத பைபர் மெட்டிரியலில் தயாரிக்கிறோம்.

வழக்கமாக இரும்பினைப் பயன்படுத்தி செட் அமைக்கும் போது அது துருப்பிடித்துச் சேதமடைந்து விடும். ஆனால் நாங்கள் துருப்பிடிக்காத வகையில் செட் தயாரிப்பதால் செட்டின் ஆயுள் அதிகரிக்கிறது. செட் தவிர்த்து ஆடுகளுக்குத் தேவையான ஃபீடரையும் பல அளவுகளில் தயாரிக்கிறோம்.எங்களிடம் ஆடு செட் அமைப்பதற்கான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக அமைத்தும் தருகிறோம்.

விளம்பரம்

இதையும் படிங்க: எந்த தேர்வும் இல்லை… அஞ்சல் துறையில் 44,228 காலியிடங்கள்… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

கால்நடை வளர்ப்பில் லாபம் ஈட்டுவதற்கு இது போன்ற நவீன முறையில் செட் அமைப்பது உதவிகரமாக இருக்கும். மேலும், நாம் வளர்க்கும் ஆடுகளும் நாம் லாபம் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும். அப்படிப்பட்டது தான் இந்த போயர் ரக ஆடு. இந்த ரக ஆடு ஒரு ஆண்டுக்கு 70 கிலோ வரை வளரும் திறன் கொண்டது. நாங்கள் அந்த போயர் ரக ஆட்டில் 140 கிலோ எடை கொண்ட ஆடு வைத்துள்ளோம்.

விளம்பரம்

இந்த போயர் ரக ஆடு சவுத்தப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்தாலும் உலகம் முழுவதும் வளர்க்கக் கூடிய நம்பர் ஒன் ரகமாக உள்ளது. இந்த ஆடு குறைந்த நாட்களிலேயே குறைவான உணவு பராமரிப்பிலேயே அதிக எடை போடக் கூடியது. தொழில் ரீதியாகப் பண்ணை அமைப்பவர்கள் இது போன்ற ஆட்டுடன் நாட்டு ஆட்டை சேர்த்து வளர்த்து கலப்பினத்தில் ஆடுகளை உருவாக்கும் போது வேகமாக எடை அதிகரிக்கக்கூடிய ஆட்டினை வளர்க்க முடியும்.

இந்த ரக ஆட்டை நாங்கள் தற்போது அதிகமாக உருவாக்கி வருகிறோம். எங்கள் பண்ணையில் தற்போது 850க்கு மேற்பட்ட ஆடுகளை இனவிருத்தி செய்து வளர்த்து வருகிறோம். ஆட்டுப் பண்ணையை லாபகரமானதாக நடத்த விரும்புபவர்கள் குட்டிகள் வேண்டும் என்றால் எங்களால் அணுகலாம். இந்த ஆட்டுக்குட்டிகள் 20 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: சுறுசுறுப்பாய் நடக்கும் சுரைக்காய் அறுவடை… கார் பருவத்துக்கு தயாராகும் விவசாயிகள்…

ஒரு போயர் இன கிடாவிற்கு 20 நாட்டு ரக ஆடு என்ற விகிதத்தில் அமைக்கலாம். நாங்கள் தலச்சேரி ரக ஆடுகளை இனச் சேர்க்கைக்காகப் பயன்படுத்துகிறோம். அதில் நல்ல ரிசல்ட் கிடைக்கிறது. இந்தமாதிரி பிறக்கிற கலப்பின குட்டி சுமார் 15 மாதங்களில் 70 கிலோ வரை வளரக்கூடியது. ஒரு ஆண்டில் 50 முதல் 60 கிலோ வரையிலான எடையை அடைகிறது. இந்த ரிசல்ட் கிடைப்பதற்கு ஜெனிடிக்ஸ் ரொம்ப முக்கியம்.

விளம்பரம்

அரசும் ஆடு வளர்ப்பதற்கு 20 லட்ச ரூபாய் முதல் ஒருகோடி ரூபாய் வரை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 100 ஆடு முதல் 500 ஆடு வரை வளர்ப்பவர்களுக்கு 50% வரைக்கும் மானியம் தருகிறார்கள். இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்றே பலரும் தெரியாமல் உள்ளனர். அதனால் இப்போது நாங்கள் முதல்முறையாக ஆடு வளர்ப்பு, செட் அமைப்பவர்களுக்கு அரசு மானியம் பெறுவதற்காக உதவுகிறோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

“கார்ல் ஹூப்பர் பேட்டிங் திறமைக்கு அருகில் நானும் சச்சினும் கூட நெருங்க முடியாது” – பிரையன் லாரா | Not even Sachin Tendulkar or me came close to Carl Hooper’s talent says Brian Lara

Next Post

ட்ரம்ப் அணியின் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் இவரா?

Next Post
ட்ரம்ப் அணியின் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் இவரா?

ட்ரம்ப் அணியின் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் இவரா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin