தமிழகத்தில் தற்போது அன்னாசிப் பழம் சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்கமாகச் சித்திரை முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதக் காலத்திற்கு அன்னாசிப் பழம் சீசன் நடைபெறும். தற்போது கொல்லிமலையிலிருந்து சேலம், ஓமலூர் மார்க்கெட்டுக்கு அன்னாசிப் பழம் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அன்னாசிப் பழ விலையும் குறைந்துள்ளது. பழச் சந்தைகளில் பழத்தின் அளவிற்குத் தகுந்தார் போல் ரூ.20 ரூ.30 ரூ.50 விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொல்லிமலையிலிருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு அன்னாசிப் பழம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கொல்லிமலையில் விளையும் பழம் சுவையானதாக இருப்பதால் சந்தைகளில் இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது.
அன்னாசிப் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு உதவுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழமாக அன்னாசிப் பழம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு ஒரு முறை சீசனில் மட்டுமே கிடைக்கும் பழம் என்பதால் பொதுமக்கள் அன்னாசிப் பழத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இதையும் படிங்க: துடிக்கும் மீசையுடன் அரிகண்டம் கொடுக்கும் இருவர்… டவுன் பகுதியில் கண்டறியப்பட்ட நடுகல்…
இதுகுறித்து அன்னாசிப் பழ வியாபாரி கூறுகையில், “கொல்லிமலையில் அன்னாசிப் பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சித்திரையில் துவங்கிய அன்னாசி சீசன் ஆடி மாதத்தில் நிறைவு பெறும். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது.
சீசன் இல்லாத நாட்களில், ஒரு பழம், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், 20 ரூ.30 ரூ.50 ரூபாய்க்கு பழம் விற்பனை செய்யப்படுகிறது. சீசன் பழம் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
