விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச டிக்கெட் தொகை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கவுள்ளன. இந்த ஆண்டு போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். 17 நாட்கள் நடைபெறும் இந்த போட்டித் தொடர் அடுத்த மாதம் 11 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரில் ஸ்போர்ட் கிளைம்பிங், ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங் உள்ளிட்ட போட்டிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
கோடை ஒலிம்பிக் போட்டிகள் ஸ்டேட் டி பிரான்ஸ் என்ற பகுதியில் நடத்தப்படவுள்ளது. இங்குதான் கடந்த 30 ஆண்டுகளுக்கும மேலாக ரக்பி, உல க தடகள சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் தொடரில் அதிகமான பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தயாராகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா 35 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
முதன்முறையாக தங்க பதக்கத்தை 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா கைப்பற்றினார். 2020 டோக்யோவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டித் தொடருக்கான டிக்கெட் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. குறைந்த பட்சம் 24 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2169 ஆகவும், அதிகபட்சமாக 980 யூரோ இந்திய மதிப்பில் ரூ. 88,601 ஆகவும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று கூடைப்பந்து மற்றும் நீச்சல் போட்டிக்கு அதிகபட்சமா ரூ. 88,601, ஜிம்னாஸ்டிக்கிற்கு அதிகபட்சம் ரூ. 62,382 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் தொகை குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
