• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் அதிவேக புல்லட் ரயில்… மணிக்கு இத்தனை கி.மீ. வேகமா? மிரளவைக்கும் வீடியோ!

GenevaTimes by GenevaTimes
July 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகின் அதிவேக புல்லட் ரயில்… மணிக்கு இத்தனை கி.மீ. வேகமா? மிரளவைக்கும் வீடியோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளியூர் பயணங்களுக்கு கார் முதல் விமானம் வரை எத்தனை வாகனங்கள் இருந்தாலும், ரயிலில் பயணம் செய்வதே பலருக்கும் தனி சுகம். ரயில்களில் செல்வது மட்டுமல்ல, அவை பிரமாண்டமாக வளைந்து செல்வதை பார்த்து ரசிப்பதுகூட ஒரு சுகம்தான்.

இந்தியாவிலேயே முதன்முதலில் ரயிலை பார்த்து ரசித்தவர்கள் சென்னை மக்கள்தான் என்பது பலரும் அறியாத ஒன்று. சென்னை மாகாணத்தில் சாலைகள் மற்றும் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு 1832 முதல் ஓடத் தொடங்கியது நீராவி இஞ்ஜின் ரயில். அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில்கள் ஓடத் தொடங்கினாலும், பயணிகள் ரயில் இயக்கப்பட்டது 1853ஆம் ஆண்டுதான். ஆனால் யோசித்துப் பாருங்கள், நீங்கள் உலகின் அதிவேக ரயிலில் அமர்ந்து பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வெளியில் தோன்றும் அழகான காட்சிகளை ரசிப்பீர்களா? அல்லது பயத்தால் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா?

விளம்பரம்

சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் உலகின் அதிவேக ரயில் மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது என்பது குறித்து காட்டப்படுகிறது. சிறகுகள் இல்லாமல் பறப்பது போல் காட்சியளிக்கும் அளவுக்கு ரயில் வேகமாக நகர்கிறது. சில நொடிகளிலேயே ரயில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.

@thehonestjohnarts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரயிலின் உட்புறம் காட்டப்பட்டுள்ளது. உள்ளே அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நபரின் கண்களும் ரயிலின் கதவுகளுக்கு மேலே நிறுவப்பட்ட ஸ்பீட்-ஓ-மீட்டரில் இருப்பதை பார்க்கலாம். ரயிலின் வேகம் அதிகரித்துச் செல்லச் செல்ல மக்களின் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இந்த ரயிலானது ஒரு சில நொடிகளிலேயே மணிக்கு 431 கிமீ வேகத்தில் ஓடத் தொடங்குகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

விளம்பரம்
விளம்பரம்

இது உலகின் அதிவேக ரயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் ஷாங்காயில் இருந்து வருகிறது. ஒரு ரயில் இவ்வளவு வேகமாக ஓடினால் பாதுகாப்பு குறித்த கவலை எழுவது இயல்புதான். ரயிலின் வேகம் அதிகமாக இருக்கும்போது வெளியே எதையும் தெளிவாகக் காண முடியாது. இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் ஆகும். அதன் வேகம் மணிக்கு 180 கி.மீ. ஆகும். அதாவது, வந்தே பாரத் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் இந்த ஷாங்காய் ரயில் ஓடுகிறது.

விளம்பரம்

Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?

சீனா ஹைலைட்ஸ் மற்றும் சிஎன்என் அறிக்கையின்படி, இந்த ரயிலின் பெயர் ஷாங்காய் மாக்லேவ் ரயில், இது உலகின் அதிவேக ரயில் ஆகும். சோதனையின் போது அதன் வேகம் மணிக்கு 500 கி.மீ. என்று கூறப்படுகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த ரயிலில் சக்கரங்கள் இல்லை, மாறாக இது மேக்னடிக் லெவிடேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்குகிறது. சிஎன்என் படி, இது புடோங் விமான நிலையத்தை லாங்யாங் சாலை நிலையத்துடன் இணைக்கிறது. இந்த ரயில் ஜெர்மன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.



Read More

Previous Post

மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் ஜூன் பணவீக்கம் 3.36% ஆக அதிகரிப்பு | Wholesale price inflation rises to 3.36% in June, highest in 16 months

Next Post

ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி வரப்போகிறது

Next Post
ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி வரப்போகிறது

ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி வரப்போகிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin