இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான சேமிப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் விளங்குகிறது. செல்வ மகள் சேமிப்புத் திட்டமானது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டதாகும்.
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பற்றி மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும். அதாவது இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது? இதில் வட்டி சதவீதம் எவ்வளவு? பிறந்த குழந்தை முதல் எத்தனை வயது குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் கணக்கினை துவங்கலாம்? மேலும் இந்த திட்டத்தில் சேமிப்பது லாபமா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே உள்ளது.
மக்கள் மனதில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம் பற்றிய கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் அதிகாரி ராதை, “செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான திட்டம் ஆகும்.
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கணக்கை துவங்கலாம். அதாவது குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஞ்சல் அலுவலகத்தில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கை துவங்கலாம். இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆகும். இந்த சேமிப்பில் குறைந்தபட்ச தொகையாக 250 ரூபாய் முதல் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை டெபாசிட் செய்ய முடியும். அதாவது மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது டெபாசிட் செய்யலாம்.
இதையும் வாசிக்க: தலைசுற்ற வைக்கும் நெத்திலி கருவாடு… விலைய கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…
இந்த சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. அதாவது பிறந்த உடனே முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பிறந்த பிறப்பு சான்றிதழ் பெற்றவுடன் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களுடைய ஆதார் அட்டை எண், ஃபான் கார்டு, 2 ஃபோட்டோ வைத்து பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை துவங்கிட முடியும்.
சேமிப்பு கணக்கினை ஆரம்பிக்கும் நாள் முதல் 21 வருடம் முடிந்து இந்த சேமிப்பு கணக்கு முதிர்ச்சி அடையும். 21 வருடம் முடிந்த பிறகு தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு முன்னதாக பணத்தை எடுக்க நினைத்தால் குழந்தையின் வயது 18 நிரம்பி இருக்க வேண்டும்.
அதாவது குழந்தையின் படிப்பிற்கோ அல்லது திருமணத்திற்கோ தேவைப்பட்டால் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் கணக்கினை துவங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கணக்கினைத் துவங்க முடியும்.
லாபமா? நட்டமா? : இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிப்பது லாபமா என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. ஏனெனில், இன்று 100 ரூபாயில் வாங்கக்கூடிய அனைத்தும் எதிர்காலத்தில் வாங்க முடியாமல் போகலாம். அதாவது 100 ரூபாயின் மதிப்பு குறையும். உதாரணமாக, இன்று ₹100க்கு 1 கிலோ மாம்பழம் கிடைக்கும் என்று எடுத்துக் கொள்வோம். ஆனால், 2030ல் அதே மாம்பழத்தின் 1 கிலோ விலை ₹300 ஆக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு. பணத்தின் வாங்கும் சக்தி காலப்போக்கில் குறைகிறது. பணவீக்கம் காரணமாக, செல்வமகள் திட்டத்தின் கீழ் 21 வருடங்களுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் பணத்தின் மதிப்பு குறையும் என்றே கருதலாம். எவ்வாறாயினும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்பது என்பது நிச்சயமாக ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும், லாபமானதாகவும் இருக்கும்” என்றும் அஞ்சல் துறை அதிகாரி ராதை தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
.png?rect=0%2C28%2C613%2C322&w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&enlarge=true&overlay=false&overlay_position=bottom&overlay_width=100&w=1200&resize=1200,630&ssl=1)