அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கு ஜூன் 24 அன்று 62 வயது பிறக்கிறது. நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அதானி குழுமத்தை அடித்தளத்தில் இருந்து வளர்த்த கௌதம் அதானி, தற்போது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்த்தியுள்ளார். பல போராட்டங்களையும், தடைகளையும் தாண்டி, நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் டாடாவுக்கு நிகராக, இந்நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியளிக்கும் நிறுவனமாக அதானி குழுமத்தை உயர்த்தியுள்ளார்.
கௌதம் அதானியை ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால், “சுயமாக உருவான கோடீஸ்வரன்” என்பது சரியாக இருக்கும். நாம் எல்லாரும் இருபது வயதில் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும்போது, அந்த வயதிலேயே கோடீஸ்வரன் ஆன பெருமையைப் பெற்றவர் கௌதம் அதானி. கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு இளைஞன் எழுதிய வெற்றிக் கதையை கேட்டால் மக்களும் ஊக்கம் பெறுவார்கள். கௌதம் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு 85.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
ஜூன் 24, 1962 அன்று, அகமதாபாத்தில் உள்ள குஜராத்தி ஜெயின் குடும்பத்தில் பிறந்தவர் கௌதம் அதானி. தங்கள் ஜவுளி நிறுவனத்தை வளர்ப்பதற்காக, அவரது தாயார் சாந்தாபென் அதானி மற்றும் தந்தை சாந்திலால் அதானி ஆகியோர் தாராட் நகரத்திலிருந்து அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால், கௌதம் அதானிக்கு ஜவுளித் துறையில் பணியாற்ற விருப்பமே இல்லை.
வைர வியாபாரம் செய்வதற்காக மும்பைக்கு சென்றார் கௌதம் அதானி. இங்கே, அவர் மஹிந்திரா சகோதரர்களுடன் இணைந்து வைரம் அடுக்குபவராக பணியாற்றத் தொடங்கினார். இதில் கிடைத்த அணுபவத்தைக் கொண்டு வைர வியாபாரியாக தனது கடையைத் திறந்தார். ரூ.6,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஒரே நாளில் முடித்துக் கொடுத்ததற்காகப் புகழ் பெற்றார். அதன்பிறகு நுகர்வோர் பொருட்கள் முதல் துறைமுகங்கள் வரை என பட்டியலிடப்பட்ட பத்து வணிகங்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக வளர ஆரம்பித்தது அதானி குழுமம்.
இதையும் படிக்க:
PM Kisan: விவசாயிகளுக்கு நற்செய்தி… பிஎம் கிசான்-க்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக் ஆப்! யூஸ் செய்வது எளிது
26/11 அன்று மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில், கௌதம் அதானி இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தீவிரவாத தாக்குதல் நடந்தது. அவர் எப்படியோ சுதாரித்து அடித்தளத்தில் ஒளிந்துகொண்டு தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். அதேபோல் 1998ம் ஆண்டு 1.5 மில்லியன் டாலர் பணம் கேட்டு கடத்தப்பட்டார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. எனினும், ஒரே வருடத்தில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மீண்டு, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற தனது நிலையை மீண்டும் பெற்றார்.
இதையும் படிக்க:
முதலீட்டு முடிவுகளை சுயமாக எடுக்கும் 72% பெண்கள்… ஆய்வில் புதிய தகவல்
தனது 60வது பிறந்தநாளில் அதானி அறக்கட்டளைக்கு ரூ.60,000 கோடி நன்கொடை அறிவித்துள்ளார் கௌதம் அதானி. அதானி அறக்கட்டளையின் தலைவராக தற்போது அவருடைய மனைவி பிரீதி அதானி உள்ளார். தற்போது, அவருடைய மகன்கள் ஜீத் மற்றும் கரண் அதானி ஆகியோர் தந்தைக்கு உதவியாக அதானி குழுமத்தில் பணியாற்றி வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)