இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்துள்ள ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால், இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 4 ஆவது டி20 போட்டி ஹராரேவில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்கள் மத்வேர் 25 ரன்களும், மருமனி 32 ரன்களும் சேர்க்க கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 152 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)