ஜூலை 11-ஆம் தேதி சிங்கப்பூரில் மாண்டாய் சாலையில் அரிய வகை காட்டு மான் மீது ஒரு டாக்ஸி மோதி விபத்துக்குள்ளானது.
காயம் காரணமாக சாம்பார் மான் இறந்து விட்டது.
சாம்பார் மான் சிங்கப்பூரைப் பூர்வீகமாக கொண்டது.
இச்சம்பவம் குறித்து ஜூலை 11-ஆம் தேதி தேசிய பூங்கா வாரியத்திற்கு தகவல் கிடைத்ததாக வனவிலங்கு மேலாண்மை இயக்குனர் கூறினார்.
இந்த சாலை விபத்தை அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த Nparks குழு மான் உயிரிழந்து கிடந்தது.

