மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் ஏற்பட்டில் 2024 ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்ற வாசி புத்தகப் போட்டி பரிசளிப்பு விழாவில் சிகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரா.யுனேஸ்வரன் கலந்துக்கொண்டார்.
வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது நிறைந்த மகிழ்ச்சி தந்தது என்று அவர் குறிப்பிட்டார்.


இதில் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகம் உட்பட 30 புத்தகங்களை வாசித்துக் காணொலி அனுப்பிய ஹரிஷ் த/பெ முகுந்தனுக்கு இந்தியா செல்லும் விமானப் பயண டிக்கெட் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், நடிகர் இளவரசு, கவிஞர் வெய்யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதுபோன்ற சிறப்பான முன்னெடுப்புகளுக்கு இயல் மன்றத் தலைவர் திருமதி.பொன் கோகிலத்திற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நடிகர் இளவரசு, மலேசிய தமிழ்ப்பள்ளிகள் தேசிய தலைமையாசிரியர் மன்ற தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் ஆகியோருக்கு யுனேஸ்வரன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.


