• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிடுகிடுவென விலை உயர்ந்த பூக்கள்… மல்லிகை பூ கிலோ எவ்வளவு தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
July 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிடுகிடுவென விலை உயர்ந்த பூக்கள்… மல்லிகை பூ கிலோ எவ்வளவு தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகத்தில் கடந்த மாதத்தில் சந்தைகளில் பூக்கள் வரத்துக் குறைவாக இருந்த நிலையில் பூக்கள் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் பெய்த மழை காரணமாகப் பூக்கள் அதிகம் விளைந்து தற்போது சந்தைகளில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலையும் சற்று குறைந்தது.

இந்நிலையில் ஜூலை 17ஆம் தேதியில் ஆடி மாதம் துவங்க உள்ளது. ஆடி மாதத்தில் பெரும்பாலும் கோவில் திருவிழாக்கள் தான் நடைபெறும், திருமண வைபவங்கள் நடைபெறாது. அதனால் ஜூலை 12ஆம் தேதி தான் இந்த மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் திருமண வைபவங்களுக்கான பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

விளம்பரம்

இதனால் கடந்த சில நாட்களாகக் குறைவாகக் காணப்பட்ட பூக்கள் விற்பனையும், விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் கோயமுத்தூர் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் மலர் அங்காடியில் இன்று பூக்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: நெல்லையில் அதிக திருமணம் நடைபெறும் மேலவாசல் முருகன் கோவில்… இன்றைக்கு எத்தனை தெரியுமா..?

பூக்கள் வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் அதிகளவில் மார்க்கெட்டில் குழுமியிருந்தனர். பன்னீர்செல்வம் மலர் அங்காடியில் முல்லை பூ கிலோ ரூ.600க்கும், மல்லிகைப் பூ கிலோ ரூ.200க்கும், ஜாதிப்பூ ரூ.400க்கும், சாமந்தி பூ ரூ.60க்கும், செவ்வந்தி பூ ரூ.320க்கும், அரளி பூ ரூ.160 முதல் 200 வரையும் விற்பனையாகி வருகிறது.

விளம்பரம்

பூ விற்பனை குறித்து பூ வியாபாரி அகிஸ் கூறுகையில், “ஆணி மாதத்திற்குப் பின்னர் ஆடி மாதத்தில் எந்த விழாவும் பெரிதாக இருக்காது. அதனால் பூ விலையும் குறைந்து விடும். அடுத்ததாக ஆவணி மாதத்தில் தான் முகூர்த்தம் நடைபெறும். அதனால் இனி வரும் நாட்களில் விற்பனையும், விலையும் குறைவாகத் தான் இருக்கும். அடுத்த புராட்டாசில் தான் விழாக்களும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்ட 65 கங்காருகள்…

Next Post

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா தோல்வி! | Nepal PM Prachanda loses vote of confidence in Parliament

Next Post
நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா தோல்வி! | Nepal PM Prachanda loses vote of confidence in Parliament

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா தோல்வி! | Nepal PM Prachanda loses vote of confidence in Parliament

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin