• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

23 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் கொலம்பியா | கோபா அமெரிக்கா தொடர் | Colombia in the final after 23 years copa america cup

GenevaTimes by GenevaTimes
July 12, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
23 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் கொலம்பியா | கோபா அமெரிக்கா தொடர் | Colombia in the final after 23 years copa america cup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சார்லோட்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் சார்லோட் நகரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் உருகுவே – கொலம்பியா அணிகள் மோதின.

39-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை ஜெபர்சன் லெர்மா துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 44-வது நிமிடத்தில் டேனியல் முனோஷ் உதவியுடன் பந்தை பெற்ற கொலம்பியாவின் ரிச்சர்டு ரியோஷ், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் அதை, உருகுவே கோல்கீப்பர் செர்ஜியோ ரோசெட் கோல் விழவிடாமல் தடுத்தார்.

முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் முதல் நிமிடத்தில் கொலம்பியாவின் டேனியல் முனோஷ், உருகுவே அணியின் மனுவெல் உகார்ட்டை முரட்டுத்தனமாக தாக்கினார். இதனால் நடுவர் சீசர் ரமோஸ், டேனியல் முனோஷுக்கு ரெட் கார்டு வழங்கினார்.

முதல் பாதியில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 68-வது நிமிடத்தில் உருகுவே வீரர் நிக்கோலஸ் டி லா குரூஸ் இலக்கை நோக்கி அடித்த பந்தை கொலம்பியா கோல்கீப்பர் கோல் விழவிடாமல் தடுத்தார். 71-வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரெஸ் இலக்கை நோக்கி அடித்த வலுவான ஷாட் கோல்கம்பத்தின் வலதுபுற விளிம்பில் பட்டு விலகிச் சென்றது.

75-வது நிமிடத்தில் பெடரிக்கோ வால்வர்டே, 85-வது நிமிடத்தில் மனுவெல் உகார்ட், 86-வது நிமிடத்தில் ஜோஷ் கிமென்ஸ், 89-வது நிமிடத்தில் மாக்சிமிலியானோ அராஜோ ஆகியோர் இலக்கை நோக்கி பந்தை கொண்டு சென்ற போதிலும் கோல்களாக மாற்ற முடியாமல் போனது. கடைசி வரை போராடிய போதிலும் உருகுவே அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. கடைசியாக 2001-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் கொலம்பியா பட்டம் வென்றிருந்தது.

இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் வரும் 15-ம் தேதி அர்ஜெண்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது கொலம்பியா அணி. இந்த ஆட்டம் புளோரிடாவில் உள்ள மியாமி கார்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.



Read More

Previous Post

சிங்கப்பூர் ஒலிம்பிக் வீரருக்கு நிதி ஆதரவு அளிக்க உள்ளதாக DBS அறிவிப்பு!!

Next Post

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்… முக்கிய உத்தரவு விரைவில் வெளியாக வாய்ப்பு

Next Post
வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்… முக்கிய உத்தரவு விரைவில் வெளியாக வாய்ப்பு

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்... முக்கிய உத்தரவு விரைவில் வெளியாக வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin