எலான் மஸ்கின் ஸ்டார்ட்அப் நிறுவனமான நியூராலிங்க் விரைவில் இரண்டாவது நபருக்கு மூளையில் தனது சிப்பினை பொருத்த இருக்கும் அறிவிப்பை வெளியிட்டது.
எலான் மஸ்க் உடன் 7 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் நிபுணர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் நியூராலிங்க். சாதாரண மனித ஆற்றலை கணினி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் பன்மடங்கு உயர்த்துவது தான் இந்நிறுவனத்தின் பிரதான குறிக்கோள். குரங்குகளை வைத்து தொடங்கிய இந்த சோதனை, கடந்த ஜனவரியில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் மனிதரின் மூளையில் பொருத்தப்பட்டது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயது நபர், தனது மூளையில் சிப்பை பொருத்திக் கொண்டதை அடுத்து தன்னால் கணினியை இயக்க முடிவதாக தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த மே மாதம் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வழங்கியது. அதனை உறுதி செய்யும் வகையில் விரைவில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதாக நியூராலிங்க் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பின்போது பேசிய எலான் மஸ்க், மனித நுண்ணறிவுக்கும் டிஜிட்டல் நுண்ணறிவுக்கும் இடையே நெருக்கமான கூட்டுறவை நியூராலிங்க் ஏற்படுத்தும் தெரிவித்தார்.
கை, கால்கள் செயலிழந்த நபர்களிடமும் இந்த ஆராய்ச்சியை நடத்துவதே இந்த திட்டத்தின் அடுத்த இலக்கு. எலான் மஸ்கின் இந்த சோதனை முயற்சி இயற்கைக்கு புறம்பானது என்ற எதிர்வினையும் சமூக வலைதளத்தில் காணமுடிகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
