• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுப முகூர்த்த தினம் எதிரொலியால் விலையேறிய பூக்கள்… மல்லிகை பூ கிலோ எவ்வளவு தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
July 11, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சுப முகூர்த்த தினம் எதிரொலியால் விலையேறிய பூக்கள்… மல்லிகை பூ கிலோ எவ்வளவு தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு விவசாயம் நடைபெறுகிறது. இங்கு காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு இணையாகப் பூக்களும் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இந்நிலையில் சுபமுகூர்த்தத் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிப்பூ இன்று 1000 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. முல்லைப்பூ கிலோ 400 ரூபாயாகவும், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது. சென்ற வாரம் முகூர்த்த நாள் ஏதும் இல்லாததால் பூ மார்க்கெட்டில் பெரிதாக விற்பனை இல்லாமல் இருந்தது. மேலும் பூக்கள் வரத்தும் அதிகரித்ததால் விலையும் குறைந்து காணப்பட்டது.

விளம்பரம்

இந்நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் இன்று பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. மேலும் ஜூன் 17ஆம் தேதி முதல் ஆடி மாதம் துவங்கும் நிலையில் இந்த மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் நாளை தான் என்பதால் அதிகளவு திருமண நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: குமரி சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரித்தது… தக்காளி, வெங்காயம் விலை தெரியுமா…

இது குறித்து பூ கமிஷன் வியாபாரி சித்தர் கூறுகையில், “முகூர்த்த நாளை ஒட்டி பூக்களின் விற்பனை அமோகமாகக் காணப்படுகிறது. மல்லிப்பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது. சென்ற வாரம் 150 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.

விளம்பரம்

சாமந்தி பூ 100 ரூபாய் வர விற்பனை ஆகின்றது. பத்து ரூபாய்க்கு விற்பனையான ரோஜாப்பூ இன்று 100 ரூபாய் வரை விற்பனையாகின்றது. நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகின்றன. 100 ரூபாய்க்கு விற்பனையான அரளிப்பூ இன்று 250 ரூபாய் வரை விற்பனையாகின்றது. நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

Gary Kirsten: தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு விஷயங்களில் ஈடுபட்ட ஷாஹீன் அப்ரிடி! பரபரப்பை ஏற்படுத்திய கேரி கிறிஸ்டன்

Next Post

சைபர் மிரட்டல் வழக்கில் இரண்டாவது சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர் – Malaysiakini

Next Post
சைபர் மிரட்டல் வழக்கில் இரண்டாவது சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர் – Malaysiakini

சைபர் மிரட்டல் வழக்கில் இரண்டாவது சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin