ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
8 வருட இடைவெளிக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தான், 2025ஆம் ஆண்டு தொடரை நடத்தவுள்ளது.
இந்த தொடருக்கான மாதிரி அட்டவணையை ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி மார்ச் ஒன்றாம் தேதி லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்ல வாய்ப்பில்லை என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது. அதேபோல், சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க:
பிசிசிஐக்கு காம்பீர் வைத்த 2 டிமாண்ட்… ஓகே சொன்ன பின்னரே பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதாக தகவல்!
இதுகுறித்து இம்மாத இறுதியில் கொழும்புவில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் காரணமாக சர்வதேச தொடர்களை தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் 2012-க்கு பிறகு இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளவில்லை.
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும், பாகிஸ்தான் அணி கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)