தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வந்தது. கோடைக்காலத்திலும் சரிவர மழை பெய்யாமல் இருந்து வந்தது. இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. தக்காளி விலையின் உயர்வு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் காய்கறிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் காய்கறிகள் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கு பரவலாக மிதமான மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்தது.
சில நாட்கள் பெய்த மிதமான மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காய்கறிகளும் விளைச்சல் வர ஆரம்பித்தது. உள்ளூரில் விளைந்த காய்கறிகள் சந்தைக்கு வரத்துவங்கியதும் காய்கறிகள் விலை சீரடையத் துவங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
இதையும் படிங்க: பாடத்தோடு உணவுப் பழக்கமும் கற்பிக்கும் பள்ளி… ஆர்.கே.புரம் பள்ளிக்கு புது அங்கீகாரம்…
அந்தவகையில் திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக வரத்து குறைந்ததன் காரணமாகத் தக்காளியின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது உள்ளூரிலிருந்து காய்கறிகள் சந்தைக்கு வரத் துவங்கி உள்ளது. அதனால் தற்போது தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது.
இது குறித்து விவசாயி ஜெனி கூறுகையில், “நாற்று நட்டவுடன் கோடை வெயில் தாக்கத்தால் தக்காளிச் செடிகள் சேதம் அடைந்து விட்டன. இந்த வருடம் பருவநிலை மாற்றத்தால் மழை பொழிய வேண்டிய நேரத்தில் வெயில் அடித்ததால் தக்காளியின் வரத்து மிக குறைவாகவே காணப்பட்டது. பொதுவாகத் தக்காளி விளைச்சல் ஆகுவதற்கு மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் இந்த வருடம் நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் விளைச்சல் பார்க்க முடிகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் 15 நாள் பெய்த மழையின் காரணத்தினால் தான் தற்போது விளைச்சலைக் காண முடிகிறது. நாங்கள் நடவு செய்திருக்கும் தக்காளியானது சாகு என்ற ஹைபிரிட் வகையாகும். ஏனென்றால் நாட்டுத் தக்காளி காய்ப்பு அதிகமாகக் காணப்படாது. மேலும் நாட்டுத் தக்காளியின் ரகங்களும் எளிதாகக் கிடைப்பதில்லை, ஹைபிரிட் தக்காளி வகையில் காய்ப்பு அதிகமாக இருப்பதால் இதைப் பயன்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
