டி20 உலகக்கோப்பையில் வெற்றியை கொண்டியபோது ரோகித் ஷர்மா அணிந்திருந்த வாட்ச் கவனம் ஈர்த்த நிலையில், அதன் சிறப்புகள் என்னன்ன என்றும் மற்ற கிரிக்கெட் வீரர்கள் வைத்துள்ள விலையுயர்ந்த வாட்ச்கள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கபில்தேவ், மகேந்திர சிங் தோனி என உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் பட்டியலில் இணைந்த ரோகித் ஷர்மா மீது, உலக கிரிக்கெட் ரசிகர்கள் கண்கள் அனைத்துமே இருந்தன. அதில் பலர் ரோகித் ஷர்மாவின் கைகளில் இருந்த பளபளக்கும் வாட்சையும் கவனித்தனர். அதனால்தான், இணையதளத்தில் அந்த வாட்ச் குறித்த தேடுதல்கள் அதிகரித்துள்ளன.
ஜூன் 29 ஆம் தேதி பார்படாஸில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடிய நிலையில், கோப்பையுடன் ரோகித் ஷர்மாவின் போட்டோ ஷூட் நடைபெற்றது. பார்படாஸ் கரையோரம் அலை ஓசைகளுக்கு மத்தியில் இந்திய ஜெர்சி அணிந்து டி20 உலக கோப்பையுடன் புகைப்படங்களை ரோகித் எடுத்துக்கொண்டார்.
அப்போது, மிக குறைந்த அளவே விற்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த Audemars Piguet நிறுவனத்தின் Royal Oak Perpetual Calendar வாட்சை அவர் அணிந்திருந்தார். இதன் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய். இதுவரை 150 வாட்ச்கள் மட்டுமே இந்த மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க – 2011 உலகக்கோப்பையில் தோனி பயன்படுத்திய பேட் எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?
ஜப்பானின் டோக்கியோவில் தயாரிக்கப்பட்ட இந்த வாட்சின் கேஸ் மற்றும் பட்டை இரண்டும் பிளாட்டினத்தால் செய்யப்பட்டவை. மாதம், வாரம், நாள், தேதி, வானியல், லீப் ஆண்டு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய காலண்டரை கொண்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. நேரத்தை குறிக்கும் முற்கள் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். நாற்பது மணி நேரத்துக்கு மேலாக மின்சார இருப்புடன் இயங்கக்கூடியது. தண்ணீர் பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இது இல்லாமல், Hublot Big Bang நிறுவனத்தின் Unico Titanium வாட்சும், ரோகித் ஷர்மா அடிக்கடி பயன்படுத்தும் வாட்களில் ஒன்றாகும். இதன் விலை சுமார் 19 லட்சம் ரூபாயாகும்.
ஆடம்பர வாட்ச்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட விராட் கோலி, விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்களை அதிகம் வைத்துள்ளார். குறிப்பாக, 4 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான Rolex Daytona வாட்ச், அவரது ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட வாட்ச் ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சுமார் 10 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒமேகா ஸ்பீட்மாஸ்டர் சில்வர் ஸ்னூபி வாட்ச்சை அதிகம் பயன்படுத்தி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா அணியும் Patek Philippe Nautilus வாட்ச், சுமார் 4 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலானது.
2021 ஆம் ஆண்டு துபாயில் இருந்து ஹர்திக் பாண்டியா கொண்டு வந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆடம்பர வாட்ச்களை, அனுமதியின்றி எடுத்து வந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது
.
&w=750&resize=750,375&ssl=1)
