வர்ஜீனியாவில் உள்ள ஸ்மித் மலை ஏரியில் 18 வயதுடைய ஜெஸ்ஸி ஹாம்ரிக் என்ற இளைஞன் நீந்த முயன்ற போது படகில் இருந்த மின்னழுத்தத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று நடந்தது.
அந்த இளைஞன் நீரில் குதித்ததாக கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்ற இருவர் முயற்சி செய்தனர். அவர்களுக்கும் மின்சாரம் தாக்கியது. அவர்கள் இருவரும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்மித் மவுண்டன் லேக் மரைன் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின் நீரில் மின்சாரம் இருப்பது தெரிய வந்தது. அதனை அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow us on : click here
The post மின்சார ஏரியில் விழுந்த 18 வயது இளைஞர் பலி!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin