இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி-20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் இணைய உள்ளனர்.
இதையும் படிங்க -2011 உலகக்கோப்பையில் தோனி பயன்படுத்திய பேட் எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?
சஞ்சு ஜாம்சன் துருவ் ஜூரெலுக்கு பதிலாகவும், ஜெய்ஷ்வால், சாய் சுதர்சனுக்கு பதிலாகவும், துபே ரியான் பராக்குக்கு பதிலாகவும் அணியில் சேர்க்கப்பட உள்ளனர். இதனால் இந்திய அணியின் பேட்டிங் பலம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்-
ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே, யஷாம் தேஷ்பாண்டே, சிவம் துபே
.
&w=750&resize=750,375&ssl=1)
