சிங்கப்பூர்: 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத நீச்சல் வீரர் குவா டிங் வென் போட்டியில் பங்கேற்பதற்காக மேல்முறையீடு செய்திருந்தார்.
சிங்கப்பூர் நீர் விளையாட்டு அமைப்பானது அவரது மேல்முறையீட்டை நிராகரித்ததை 31 வயதான குவா டிங் வென் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது.
குவாவுக்குப் பதிலாக நீச்சல் வீரர் கான் சிங் ஹுவீ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

