38
போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதால் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பகிஷ்கரிப்பு சட்டவிரோதமானது எனவும், சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இ.போ.ச’வுக்கு சொந்தமான பஸ்களில் ரயில் பயணச்சீட்டை பயன்படுத்தி இலவசமாக பயணிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


