• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதுதான் எனது இலக்கு… புதிய தலைமை பயிற்சியாளர் காம்பீர் மெசேஜ்…

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதுதான் எனது இலக்கு… புதிய தலைமை பயிற்சியாளர் காம்பீர் மெசேஜ்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதுதான் தனது இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிசிசிஐ கவுரவ செயலாளர் ஜெய்ஷா இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து கவுதம் காம்பீருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

விளம்பரம்

டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்தாலும் உலகக்கோப்பை டி20 தொடரை கவனத்தில் கொண்டு பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. பிசிசிஐயின் இந்த நடவடிக்கை நல்ல பலன் கிடைத்து, கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.

இதற்கிடையே புதிய தலைமை பயிற்சியாளருக்கான அறிவிப்பை வெளியிட்டு, விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்று வந்தது. இறுதியாக கவுதம் காம்பீர் மற்றும் டபிள்யூ.வி.ராமன் பெயர்கள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அடிபட்டன. முன்னதாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளருக்கான ரேஸில் முன்னிலை பெற்றார்.

விளம்பரம்

இதையும் படிங்க – விராட் கோலி போட்ட ஒற்றை போஸ்ட்.. ஆசிய அளவில் சாதனை.. என்ன தெரியுமா?

அவர்தான் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவித்த நிலையில், இன்று பிசிசிஐ கவுரவ செயலாளர் ஜெய் ஷா கவுதம் காம்பீர் பெயரை அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி நடத்திச் செல்ல கவுதம் காம்பீர்தான் மிகச்சிறந்த நபர் என்று வாழ்த்தியுள்ளார் ஜெய் ஷா.

India is my identity and serving my country has been the greatest privilege of my life. I’m honoured to be back, albeit wearing a different hat. But my goal is the same as it has always been, to make every Indian proud. The men in blue shoulder the dreams of 1.4 billion Indians… pic.twitter.com/N5YyyrhXAI

— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024

விளம்பரம்

புதிய பொறுப்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்த தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காம்பீர், ‘இந்தியாதான் எனது அடையாளம். எனது நாட்டிற்கு பணியாற்றுவதை எனக்கு கிடைத்த சிறப்பாக கருதுகிறேன். ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்வதுதான் எனது இலக்கு. இந்திய கிரிக்கெட் அணி மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

.



Read More

Previous Post

A/L மாணவர்களுக்காக விஷேட செய்தி

Next Post

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது: அதிபர் புதின் வழங்கினார் | PM Modi receives Russia highest civilian honour

Next Post
பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது: அதிபர் புதின் வழங்கினார் | PM Modi receives Russia highest civilian honour

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது: அதிபர் புதின் வழங்கினார் | PM Modi receives Russia highest civilian honour

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin