ரஷ்யா உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போர்க்களத்தில் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் புதினை தனியே சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய பிரதமர், போர், மோதல்கள், தீவிரவாத தாக்குதல்கள் என எதுவாக இருந்தாலும், உயிர் பலி ஏற்படும் போது மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வேதனை ஏற்படுவதாக கூறினார்.
அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, நெஞ்சம் பதறுவதாக, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கம் தெரிவித்தார். மேலும், உக்ரைனுடனான போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாஸ்கோவில் உள்ள அணு ஆயுத கண்காட்சி மையத்தை அதிபர் புதினுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். மேலும் அங்கு இந்திய மற்றும் ரஷ்ய மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இதையும் படிக்க:
2 நாள் அரசு முறை பயணம்… ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிய பிரதமர் மோடி!
இதனிடையே, சென்னை மற்றும் ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டோக் இடையே கடல் வழித்தடத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர், அங்கு வாழும் இந்தியர்களுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து பேசிய அவர், கங்கா-வால்கா நாகரிகம் மூலம் இருநாடுகளும் தத்தமது பெருமைகளை கண்டறிவதாக கூறினார்.
மேலும் இந்தியா மற்றும் ரஷ்யாவை குறிப்பிடும் பழைய இந்திப் பாடல் ஒன்றை மோடி பாடினார். மேலும், ரஷ்யாவின் காசன் மற்றும் யேகாடெரின்பர்க்கில் துணை தூதரகங்கள் அமைக்க இருப்பதாகவும் கூறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
