குவா மூசாங்: ஜாலான் குவா மூசாங்- கோல க்ராய் பெண்டாஹாரா போக்குவரத்து சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் மீது மரக்கட்டைகள் விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) காலை 11.20 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் இந்த சம்பவம் மற்றொரு வாகனத்தின் டாஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சித்தி நோரேலியானா கமருசான் 21, அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்த லோரியில் இருந்து விழுந்த மரக் கட்டையின் தாக்கம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் காணப்பட்டார். சித்தி நோரேலியானாவின் வருங்கால கணவர், நிக் அம்னான் அரிஃப் நிக் அனுவார் 22, அவர் தற்போது குவா மூசாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கிடையில், குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூவை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிசெய்ததுடன், போலீசார் வழக்கை விசாரித்து வருவதாகவும் கூறினார்.


