அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.
‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன பின்னரும் 70 முதல் 80 சதவீத படப்பிடிப்பு தான் இன்னும் முடிவடைந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஒரு வழியாக இந்த படத்திற்கு இருந்த சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தற்போது அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஜூலை இரண்டாம் வாரத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகளை தொடங்கி வரும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்டு பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது நாளை இரவு 7.03 ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட இருப்பதாக சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ அப்டேட் வெளிவர தொடங்கி விட்டால் அடுத்தடுத்து ஆச்சரியப்படும் அப்டேட்டுகள் வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ஆகும்.’

&w=1200&resize=1200,675&ssl=1)