கடந்த 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக நீடிப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்ததன் மூலம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்பது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளின் அணிகள் விளையாட உள்ள நிலையில் பாகிஸ்தானில் நடைபெறுவதால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி பங்கேற்காது என தகவல் வெளியானது.
கடந்த 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு செல்ல இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக, அந்த போட்டி பாகிஸ்தானுக்கு வெளியே மாற்றப்பட்டது.
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும், பாகிஸ்தான் அணி கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் விளையாடியது.
இதையும் படிக்க:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காதா? – வெளியான முக்கிய தகவல்!
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தார்.
இதன்மூலம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்பது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற பிசிசிஐ பரிந்துரைக்கலாம் என்றும், இதில் இந்திய அரசின் முடிவே இறுதியானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்திய அணி பங்கேற்காவிட்டால், இந்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில், இந்த பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
