• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம் | Sri Lanka name Jayasuriya as interim coach

GenevaTimes by GenevaTimes
July 8, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம் | Sri Lanka name Jayasuriya as interim coach
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத இறுதியில் இந்தியா உடன் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. போட்டிகள் ஜூலை 27ல் தொடங்குகிறது. இந்த நிலையில் தான், சனத் ஜெயசூர்யா நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், இலங்கை அணி டி20 உலகக் கோப்பையயில் மோசமாக தோல்வியடைந்ததை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இலங்கை படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இவ்வாறு தொடர் தோல்விகளில் இருந்து இலங்கை அணியை மீட்டெடுக்கும் பொருட்டு தற்போது தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயசூர்யா இதற்கு முன் இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா. அவரது அதிரடி பேட்டிங் திறன் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிவர். தன் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் பந்து வீசி விக்கெட்டையும் வீழ்த்துபவர். ரிச்சர்ட்ஸ், சச்சினை அடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் எனும் பெயரை பெற்ற வீரர்.

1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இவரது பங்கு பிரதானமானது. அதே போல் 2007 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2009 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் விளையாடியவர். கடந்த 2011-ல் ஓய்வு பெற்றார். தனது அதிரடி பேட்டிங்கின் ஊடாக ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவர்.

பாயிண்ட் திசையில் லாஃப்ட் ஷாட் ஆடுவது அவரது டிரேட்மார்க் ஷாட். இலங்கை அணியின் மேட்ச் வின்னராக அசத்தியவர். 1996 உலகக் கோப்பையில் ஆல்-ரவுண்ட் செயல்பாட்டுக்காக தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இயங்கியுள்ளார்.



Read More

Previous Post

5 நாட்களாக நகைப்புக்குரிய போராட்டத்தை நடத்திய வைத்தியர்கள்: பொது மக்கள் கடும் விசனம்

Next Post

தகுதியான குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்… ஆயுஷ்மான் சிகிச்சையில் மத்திய அரசு கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

Next Post
தகுதியான குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்… ஆயுஷ்மான் சிகிச்சையில் மத்திய அரசு கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

தகுதியான குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்... ஆயுஷ்மான் சிகிச்சையில் மத்திய அரசு கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin