2
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இம்மாதம் 17 க்குப் பின்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ. எல். ரத்நாயக்க இது தொடர்பில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது: 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் இம்மாதம் 17 க்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும்.
இந்த வகையில், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதிக்கும் அக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும்.
லோரன்ஸ் செல்வநாயகம்

