இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 4:30 அளவில் ஆரம்பமாகிறது. இந்த போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
உலக சாம்பியனான இந்திய அணி உலக கோப்பை தொடருக்கே தகுதி பெறாத ஜிம்பாவே அணியிடம் தோல்வி அடைந்திருப்பது இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரல் உள்ளிட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் அற்புதமாக வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிகம் குறை சொல்ல முடியாத அளவுக்கு பவுலர்களின் ஆட்டம் முதல் போட்டியில் அமைந்தது.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய அணி – ஷுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா
இதையும் படிங்க – சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காதா? – வெளியான முக்கிய தகவல்!
ஜிம்பாப்வே அணி – வெஸ்லி மாதேவெரே, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா (கேப்டன்), டியான் மியர்ஸ், ஜொனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே (விக்கெட் கீப்பர்), வெலிங்டன் மசகட்சா, லூக் ஜாங்வே, பிளஸ்ஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா, பிராண்டன் மவுடா, ஃபராஸ்வான் அக்ரம், தாடும்
.
&w=750&resize=750,375&ssl=1)
