• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிங்கப்பூரில் பணிபுரிய இந்தியத் தாதியர் நாட்டம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 7, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சிங்கப்பூரில் பணிபுரிய இந்தியத் தாதியர் நாட்டம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் இந்தியத் தாதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மேகாலய மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது  கெரலின் மராக்கும் ஒருவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கெரலினின் தந்தை காலமானார். அதையடுத்து, அவரது குடும்பத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. சிங்கப்பூரில் வேலை செய்வதன் மூலம் குடும்பத்தின் நிலை மேம்படும் என்கிறார் கெரலின். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவற்றில் சேரவும் மேகாலயா மாநில அரசு 2023ஆம் ஆண்டில் அங்குள்ள தாதியருக்கென்றே சிறப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியது.

அதில் கெரலினைப் போலவே பல தாதியர் கலந்துகொண்டனர். இந்தியத் தாதியரைப் பணியமர்த்த பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவற்றில் சிங்கப்பூர், ஜப்பான், பிரிட்டன் உட்பட பல நாடுகள் அடங்கும். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கெரலின் சிங்கப்பூரில் பணிபுரிய முடிவெடுத்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் தாதியர் வாரிய உரிமத் தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். சிங்கப்பூரில் உள்ள தாதிமை இல்லம் ஒன்றில் பணிபுரிய அவருக்கு இடம் கிடைத்துள்ளது. வாரியத்தில் தமது பெயரைப் பதிவு செய்துகொள்ள அவர் காத்திருக்கிறார். அதன் பிறகு, வேலை அனுமதி அட்டைக்காக அவர் விண்ணப்பம் செய்வார் என்று ஆள்சேர்ப்பு முகவையான அஜீத் என்டர்பிரைசஸ் கூறியது.

“சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவர். எனவே, புதிதாக இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளத் தேவையில்லை,” என்று கெரலின் தெரிவித்தார். தற்போது அவர் மேகாலயாவில் பெறும் சம்பளத்தைவிட சிங்கப்பூரில் அவருக்கு வழங்கப்படும் சம்பளம் ஏழு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மெகாலயா மாநிலத்தில் நடைபெற்ற ஆள்சேர்ப்பு நிகழ்வில் சிங்கப்பூரில் பணிபுரிய 13 தாதியர் பணியமர்த்தப்பட்டனர். வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்பும் இந்தியத் தாதியர்கள் பலர் சிங்கப்பூரைத் தேர்வு செய்வதாக அம்மாநிலத்தின் திறன் மேம்பாட்டு மன்ற நிர்வாக இயக்குநர் திரு எஸ். ராம்குமார் கூறினார். நிகழ்வில் கலந்துகொண்ட தாதியரில் 27 பேரை ஜப்பான் பணியமர்த்தியுள்ளது.

Previous articleஇஸ்ரேலின் தாக்குதலில் தகர்ந்த பள்ளி; 16 பேர் பலி
Next articleமஇகா உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட டி.மோகன் அதிர்ச்சி தோல்வி



Read More

Previous Post

IndvsZim: அபிஷேக் சர்மாவின் எழுச்சி.. 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது-india beat zimbabwe by 100 runs in 2nd t20i

Next Post

மன்னாரில் கோரவிபத்து அருட்தந்தை பலி – ஐபிசி தமிழ்

Next Post
மன்னாரில் கோரவிபத்து அருட்தந்தை பலி – ஐபிசி தமிழ்

மன்னாரில் கோரவிபத்து அருட்தந்தை பலி - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin