மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகர் சல்மான் கான், அவருக்கு புனைப்பெயர் ஒன்றையும் கொடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி, இன்று (ஜூலை 7, 2024) தனது 43 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முன்னதாக, மும்பையில் நடிகர் சல்மான் கான் வசிக்கும் கேலக்ஸி அப்பார்ட்மெண்டுக்கு தனது மனைவி சாக்ஷியுடன் சென்ற எம்.எஸ்.தோனி, அங்கு தனது பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கேக் வெட்டினார். அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவரு அலப்பற’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
இணையத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், சுற்றிலும் பலரும் நின்று கொண்டிருக்க, தோனி கேக் வெட்டி, அதை தனது மனைவிக்கு ஊட்டுகிறார். சாக்ஷி தோனியும் கேக் துண்டை தோனிக்கு ஊட்டி விடுகிறார். பின்னர், சாக்ஷி தனது கணவர் தோனியின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.
MS Dhoni celebrating his 43rd birthday with Sakshi. ❤️⭐#HappyBirthdayDhoni pic.twitter.com/fC1ExC8mMX
— Johns. (@CricCrazyJohns) July 6, 2024
இதனைத் தொடர்ந்து, தோனி பிறந்தநாள் கொண்டாடியபோது தான் அவருடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சல்மான் கான், பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் சார் @msdhoni என்று பதிவிட்டுள்ளார்.
Happy Birthday Kaptaan Sahab!@msdhoni pic.twitter.com/2bjCTNWRil
— Salman Khan (@BeingSalmanKhan) July 6, 2024
அண்மையில் மும்பையில் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாவில் சல்மான் கானும் தோனியும் கலந்து கொண்டனர். அப்போது, அம்பானி குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சல்மான் கான் நடனமாடிய வீடியோ வெளியானது. இந்த விழாவில் மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்ட தோனி, பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உடன் நீண்ட நேரம் தோனி பேசிக் கொண்டிருந்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)