பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து மேலும் ஒரு தடகள வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியாவில் இருந்து 28 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நீளம் தாண்டுதல் வீரரான ஆல்ட்ரின், தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:
அதிமுக நிர்வாகிகள் பலர் தனக்காக தேர்தல் பணியாற்றுகின்றனர் – நா.த.க. வேட்பாளர் அபிநயா
இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் ஆறு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
