ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில், கொண்ட இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் ஆடும் 11 வீரர்களில் ஷுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வே அணி தொடக்க வீரர் வெஸ்லி மத்வேர் 21 ரன்களும், பிரையன் பென்னட் 23 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சிக்கந்தர் ராசா 17 ரன்களும், டியோன் மையர்ஸ் 23 ரன்களும் எடுக்க, விக்கெட் கீப்பர் க்ளைவ் மடான்டே 21 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும்.
இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர். இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணி ஜிம்பாப்பை தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
