மாத்தறை – கொடவில பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் 2 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி, மாத்தறை கொடவில பகுதியில் உள்ள வைத்தியசாலையில் மூச்சுத்திணறல் காரணமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேலும் வேறு வைத்தியசாலைக்கு செல்ல அம்பியூலன்ஸ் தர வைத்தியசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இனால் சுமார் 10 கி.மீ பயணம் செய்து வேறு வைத்தியசாலை சென்றதாகவும், 30 நிமிடங்களுக்குமுன்பு குழந்தையை கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என அந்த வைத்தியசாலை வைத்தியர் கூறியதாகவும் பெற்றோர் தெரிவித்திருந்தனர். R

