மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்திக்கு பேனல்களை நிறுவ கடன் பெறலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 10 KW திறன் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. MNRE/REC இணையதளத்தில் விண்ணப்பதாரர் பதிவு செய்வது முதல் கடன் வழங்குவது வரை எஸ்பிஐ இணையதளத்தில் முழு செயல்முறையும் நிர்வகிக்கப்படுகிறது.
3 KW வரை சோலார் பேனல்களை அமைக்க அதிகபட்சமாக ரூ.2 லட்சமும், 3 KW முதல் 10 KW வரை சோலார் பேனல்களை அமைக்க அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரையும் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்குபவர் 70 வயதை அடையும் முன்னர் கடனை கட்டி முடிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், 65 வயது வரையிலான நபர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும், 680க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைக்க போதுமான இட வசதி, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கு PAN கட்டாயமில்லை என்றும், அதற்கு மேற்பட்ட கடன் தொகைக்கு PAN எண் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. 3KW அமைக்க திட்டச் செலவில் 10 சதவீதத்தை முன் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்றும், 10KW வரையிலான சோலார் பேனல்களுக்கு 20% முன் தொகையை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
மத்திய அரசு ஊழியர்களுக்கு உயரும் ஊதியம்… எப்படி தெரியுமா?
கடனை அதிகபட்சம் 120 மாதங்களில் செலுத்தலாம். கடன் தொகைக்கு ஈடாக சொத்துகளை கட்ட வேண்டும். ஒரு 1KW சோலார் பேனல் அமைக்க ரூ.30,000, 2KW-க்கு ரூ.60,000, 3KW -க்கு மேல் ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படும் என்றும், மானியத் தொகை கடன் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கு குறைந்தபட்ச ஆண்டு வருமானம் தேவையில்லை என்றும், அதற்கு மேலான தொகைக்கு ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் இருக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. இந்த கடனுக்கு முதலில் https://www.pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அது நிறைவடைந்த பிறகு https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)