மகாராஷ்டிரத்தில் 5 சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரத்தின் ஆசாத் நகரைச் சேர்ந்த சுமார் 12 வயதுடைய 5 சிறுவர்கள் நேற்று (ஜூலை 05) மாலையில் நண்டுகளைப் பிடிப்பதற்காக மும்ப்ரா என்ற மலைப்பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், நண்டு பிடிக்கச் சென்ற சிறுவர்கள் வழிதவறி, திரும்பி வெளியில் வரமுடியாத பகுதிக்கு சென்று மாட்டிள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவர்கள் உதவிக்காக கூச்சலிட்டுள்ளனர். அந்த வழியே சென்ற ஒருவர், சிறுவர்களின் சத்தத்தைக் கேட்டு, தேடியுள்ளார். ஆனால், அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

