• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆய்வில் தகவல்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆய்வில் தகவல்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வறுமையைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2011-12ம் ஆண்டில் 21 சதவீதமாக இருந்த கிராமப்புற வறுமை தற்போது 8.5 சதவீதமாக குறைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குறைவானது, மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை நிலையில் இருந்து பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதை பிரதிபலிக்கிறது.

தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) சோனல் தேசாய் தலைமையிலான பொருளாதார நிபுணர்கள் குழு இந்த ஆய்வை நடத்தினர். NCAER இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய சுதந்திரமான, இலாப நோக்கற்ற பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி சிந்தனைக் குழுவாகும். NCAER, 1956ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்டது, இது பல தசாப்தங்களாக தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

இந்திய மனித வளர்ச்சியை கணக்கெடுத்து தந்துள்ள டேட்டாக்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக NCAER தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் வறுமை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதன்படி, 2011-2012ஆம் ஆண்டில் கிராமப்புற வறுமை 24.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது ​​8.5 சதவீதமாக உள்ளது.

இதையும் படிக்க:
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. இப்போ வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?

மேலும், 2011-2012ஆம் ஆண்டில் நகர்ப்புற வறுமை 13.4 சதவீதமாக இருந்தது, தற்போது 8.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளாக சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து வரும் மத்திய அரசு, வறுமையில் இருக்கும் மக்களைப் பொருளாதாரத்தில் உயர்வதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது . இதன் காரணமாகவே , இந்தியாவின் வறுமை கணிசமாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

கிராமப்புற வறுமை 7.2 சதவீதமாகவும், நகர்ப்புற வறுமை 4.6 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட எஸ்பிஐ ஆராய்ச்சியின் கணிப்புகளை இந்த மதிப்பீடு மிஞ்சியது. கடந்த மார்ச் மாதம், RBI முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் மற்றும் பொருளாதார நிபுணர் எஸ்.மகேந்திர தேவ் ஆகியோர், வீட்டு உபயோக நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் (HCES) அடிப்படையில், 2011-12 உடன் ஒப்பிடும்போது, ​​2022-23ல் இந்தியாவின் வறுமை விகிதம் 10.8 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிக்க:
ஆன்லைனில் ஈசியாக ITR பதிவு செய்வது எப்படி..? ஈஸியான டிப்ஸ் இதோ

விளம்பரம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி, பிவிஆர் சுப்பிரமணியம், சமீபத்திய வீட்டு உபயோக நுகர்வோர் செலவின கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி, இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆகஸ்ட் 2022 மற்றும் ஜூலை 2023க்கு இடையில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பானது, மத்திய அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் செயல்படுவதை சுட்டிக் காட்டுகிறது.

.

Read More

Previous Post

Anbumani : உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைப்பு: இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? – அன்புமணி கேள்வி!

Next Post

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வெற்றி | Reformist Masoud Pezeshkian wins presidential elections in Iran

Next Post
ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வெற்றி | Reformist Masoud Pezeshkian wins presidential elections in Iran

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வெற்றி | Reformist Masoud Pezeshkian wins presidential elections in Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin